மேலும் அறிய

உத்திரமேரூர் : விபூதி.. நடனம்.. 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு..! வரலாறு என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசரின் அரிய சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தில் பல்லவர் காலத்தை சார்ந்த 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட சைவ சமயத்தின் ஒரு பிரிவான லகுலீச பாசுபதத்தை நிறுவிய லகுலீசரின் அரிய சிலை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து  கோழியாளம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது இச்சிலையை கண்டறிந்தனர்

உத்திரமேரூர் : விபூதி.. நடனம்..  1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு..! வரலாறு என்ன?
 
பாசுபதம் 
 
லகுலம் என்றால் தடி  ஈசம் என்றால் ஈஸ்வரன்  தடியைக் கொண்டு சைவசமயத்தை பரப்ப சிவபெருமானே மனித உருவில் 28 வது அவதாரமாக உருவெடுத்ததே லகுலீசர் என நம்பப்படுகிறது. சைவ சமயத்தின் முக்கிய பிரிவான பாசுபதத்திலிருந்து இந்த லகுலீச பாசுபதம் தோன்றியது.

உத்திரமேரூர் : விபூதி.. நடனம்..  1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு..! வரலாறு என்ன?
”கிபி 2 ஆம் நூற்றாண்டில் குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டத்தில் காரோஹன் என்னுமிடத்தில் தோன்றி தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு வேர்விடத் தொடங்கியது, சங்க காலத்திலேயே இதன் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இதைப் பின்பற்றுபவர்கள் விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொண்டு, சாம்பலில் நடனமாடி சாம்பலில் படுத்துறங்கி மாலைகளை அணிந்து கொண்டு லகுலீச பாசுபதம்  சார்ந்த கோயில்களில் மட்டுமே இரவில் தங்குவார்கள். பல்லவர் காலத்தில் உச்சத்திலிருந்த இந்த பாசுபத லகுலீசம் பின்பு படிப்படியாக வலுவிழக்க தொடங்கியது சோழர்கால அரசவைகளில் இவர்கள் ராஜகுருவாக செல்வாக்குடன்  இருந்துள்ளார்கள் என்பதை பல குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

உத்திரமேரூர் : விபூதி.. நடனம்..  1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு..! வரலாறு என்ன?
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறியதாவது, பரந்து விரிந்த தமிழகத்தில் இதுவரை சுமார் 20 க்கும் மேற்பட்ட லகுலீசர்  உருவங்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்திலும் இதுதான் முதல் சிலை எனவே இதை அரிதாகவே நினைக்க வேண்டியுள்ளது. நாங்கள் கண்டறிந்த இந்த சிலையானது 95 சென்டிமீட்டர் உயரமும் 65 சென்டிமீட்டர் அகலமும் கொண்டு ஆடை யின்றி சம்மணமிட்டு  அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதன் தலையில் ஜடா பாரமும் இரு காதுகளில் அழகிய குண்டலங்கள் கழுத்தில் ஒட்டிய  அணிகலனாக சவடியும் வலக்கையில் தண்டும், இடக்கையை தொடை மீது வைத்த நிலையில் தொப்புளின் கீழ் ஆண்குறி அருகே மலர் வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இடது தோள்பட்டை  மேலே படம் எடுத்த நிலையில் நாகத்தின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

உத்திரமேரூர் : விபூதி.. நடனம்..  1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு..! வரலாறு என்ன?
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடு அஸ்திவாரம் தோண்டும் போது இது கிடைத்துள்ளது பூமிக்கு அடியில் பல ஆண்டுகள் இருந்துள்ளதால் சற்று சிதைந்த நிலையில்  காணப்படுகிறது.இதை ஊர் மக்கள் சிலர் அம்புரிஸ்வரர் என்கின்றனர், ஆனால் இது லகுலீசர் சிலையாகும். தமிழகத்தில் லகுலீச பாசுபத ஆய்வாளர்களும், தொல்லியல் அறிஞர்களுமான மங்கை வீரராகவன் மற்றும் சுகவன முருகன் ஆகியோர், இதை லகுலீசர் என்பதையும் ஏழாம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர்கால சிலை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்” என தெரிவித்தார்.

உத்திரமேரூர் : விபூதி.. நடனம்..  1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு..! வரலாறு என்ன?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள முதல் லகுலீசர் சிலை இது என்பதாலும், கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் இந்த அரிய வரலாற்று கலைப் பொக்கிஷத்தை உரிய கவனம் செலுத்தி  பாதுகாக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின்  கோரிக்கையாக உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
"நீங்கள் வரும்போது மட்டும்தான் உணவு நன்றாக இருக்கும்" - ஆட்சியரிடம் புகார் அளித்த பழங்குடி மாணவர்கள்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Embed widget