collector: கணவனும் மனைவியும் மாவட்ட ஆட்சியர்..! அதுவும் பக்கத்து பக்கத்து மாவட்டத்தில்..! சுவாரசிய தகவல்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்ணு சந்திரனும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது குறிப்பிடத்தக்கது

சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம், 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதிரடிக்கு மேல் அதிரடி:
நாகை மாவட்ட ஆட்சியராக உள்ள அருண் தம்புராஜ் ஐஏஎஸ், கடலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை செயலாளராக உள்ள அன்னே மேரி ஸ்வர்னா, அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக உள்ள தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரிகள் துறை இணை செயலாளராக உள்ள மெர்சி ரம்யா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

