மேலும் அறிய

TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகும் மழை..மீனவர்களுக்கு எச்சரிக்கை.. வானிலை மைய அப்டேட்..

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்க கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (21.11.2022) காலை 0830 மணி அளவில் காரைக்காலில்  இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 470 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திர, தமிழக-புதுவை  கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.
 
21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  விழுப்புரம், செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

24.11.2022 மற்றும் 25.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்;  சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று  சில நேரங்களில் மணிக்கு 20-25 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 30  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

21.11.2022 மற்றும் 22.11.2022:  ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 22.11.2022 காலை வரை `சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?
அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?
Embed widget