‛பார்த்து பார்த்து... மேஜை நாற்காலிக்கு வியர்க்க போகுது...’ ஆல் பேன்,லைட் ஆன்... வேறு எங்கே.. அரசு அலுவலகம் தான்!
மின்தடையில் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆளில்லாத மேஜைக்கு மின்விசிறியும், மின்விளக்கும் இயக்கப்பட்டது.
மின் பற்றாக்குறை, மின் வெட்டு என மாநிலமே குலுங்கிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவு தூக்கத்தை இழந்து மக்கள் மின்தடையால் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசு அலுவலகங்களில் மின்சாரத்தை வீணாகும் வேலைகள் தொடர்ந்த நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் அதன் தொடர்ச்சி தான்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துறை அதிகாரிகள் ஒருசிலர் சென்றிருந்தனர். இந்நிலையில் மதியஉணவு இடைவேளையின் போது ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகப்பணியில் ஒருவரை தவிர அனைவரும் வெளியில் சென்றிருந்தனர்.
ABP Nadu Exclusive: உள்ளே போகும் விஜய் சேதுபதி... பின் தொடரும் ஃபாசில்... அங்கு தான் இணைகிறார் கமல்... இது தான் ‛விக்ரம்’ கதை!
அலுவலகப்பணியில் இருந்து வெளியே சென்ற அலுவலர்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறிகளை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் அலுவலகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட மின்விசிறிகள் ஆளில்லாத அரசு அதிகாரிகளின் அலுவலக மேசைக்கு காற்றோட்டம் அளித்தது. பொதுமக்களுக்கு நிலக்கரி பற்றாக்குறை, மின்பற்றாக்குறை என காரணம் கூறி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க வேண்டும், தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்த கூடாது என அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகள், தான்தோன்றித்தனமாக அரசு அலுவலகத்தில் பல மின்விசிறிகளை ஓடவிட்டு சென்றது சம்பவம் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Hyderabad : 4 மாத கர்ப்பிணி... நண்பருடன் ஆடையின்றி வீடியோ கால்... மிரட்டிய நபரை கொலைசெய்த கொடூரம்!
மேலும் மின்சிக்கனத்தைப்பற்றி பேசும் அதிகாரிகள் தாங்கள் வேலை செய்யும் அரசு அலுவலகங்களில் மின்சிக்கனத்தை கடைபிடிக்காதது குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை ஆதங்கப்படுத்தியுள்ளது. அப்போது பொதுமக்கள் கூறுகையில், தங்கள் வீடுகளில் மின்விசிரியை இது போன்று நிறுத்தாமல் ஒடவிட்டு செல்வார்களா? என்றும், பொதுமக்கள் கேள்வி எழுப்பி சென்றனர். மின்சிக்கனம் என்பது அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் மின்சிக்கனத்தை கடைபிடித்தால் மட்டுமே மின்தட்டுப்பாட்டை போக்கமுடியும் என்றும் அரசு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் கார் நிறுத்தும் இடத்தில் காருக்கு மின்விசிறி பொருத்தப்பட்டு, காருக்கு மின்விசிறி ஓடிய சம்பவம் சர்ச்சையான நிலையில், மீண்டும் தற்போது குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அனைத்து மின் விசிறிகளும் ஆளில்லாமல் ஓடிக்கொண்டிருந்த சம்பவத்தால் மின்வெட்டால் அவதிப்படும் மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்று அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.