Prakash Raj Meet TRS Leader: இனி அரசியல்.! எம்.பி. ஆகிறாரா நடிகர் பிரகாஷ்ராஜ்? தெலங்கானாவில் நடக்கும் அரசியல் மூவ்!
தெலங்கானாவில் இரண்டு தொகுதிகளுக்கான எம்.பி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சி சார்பில் பிரகாஷ்ராஜ் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில் இரண்டு தொகுதிகளுக்கான எம்.பி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சி சார்பில் பிரகாஷ்ராஜ் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தொடர்ந்து பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை பொதுமேடைகளில் பேசியும், சமூகவலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இவர் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் மீண்டும் சந்திரசேகரராவை எர்ரவல்லி பண்ணை வீட்டில் சந்தித்து பேசியுள்ளார்.
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடந்து வருகிறது. தெலங்கானாவில் மொத்தமுள்ள ஏழு ராஜ்யசபா எம்.பி பதவிகளும் ஆளும் கட்சியிடமே உள்ளது. இதனிடையே ராஜ்ய சபாவில் எம்.பி.,க்களாக இருக்கும் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 21ம் தேதியுடன் நிறைவு பெறுவதால், இரண்டு எம்.பி. பதவிக்கான தேர்தல் வருகிற ஜூன் 10 தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும் மாநிலங்கவையில் உள்ள ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தது. இந்த நிலையில் பிரகாஷ் ராஜ் மற்றும் முதல்வர் சந்திப்பின் வாயிலாக பிரகாஷ்ராஜ்ஜூக்கு எம்.பி சீட் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் ஆளும் கட்சி சார்பில் மனுதாக்கல் செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் பாஜக தரப்பில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபையில் தற்போது உள்ள பலத்தின்படி ஆளும் கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்