Hyderabad : 4 மாத கர்ப்பிணி... நண்பருடன் ஆடையின்றி வீடியோ கால்... மிரட்டிய நபரை கொலைசெய்த கொடூரம்!
ஹைதராபாத்தில் பெண் ஒருவர் திட்டமிட்டு ஆண் நண்பரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஹைதராபாத்தை அடுத்த அமீர்பேட்டையை சேர்ந்தவர் ஸ்வேதா. இவருக்கும் பெங்களூரில் உள்ள சாப்ட்வெர் இன்ஜினீயருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ஸ்வேதா 4 மாதம் கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் இவருக்கும் புகைப்படக் கலைஞரான அஸ்மகுமார் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி தனது கணவருக்குத் தெரியாமல் ஸ்வேதா தனது நண்பர் அஸ்மகுமாருடன் டேட்டிங் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு மர்ம நபர் ஒருவர் அஸ்மகுமாரை சுத்தியால் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, அஸ்மகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 6 ஆம் தேதி பலியானார். இதையடுத்து, கொலையாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அஸ்மகுமாருடன் சென்ற திருமணமான பெண்ணான ஸ்வேதாவிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது ஸ்வேதாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஸ்வேதா தனது பேஸ்புக் நண்பருடன் இணைந்து கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
அஸ்மகுமார் மற்றும் ஸ்வேதா அடிக்கடி வீடியோ காலில் தனிமையில் பேசியுள்ளனர். அந்த நேரத்தில் அஸ்மகுமார் ஸ்வேதாவை ஆடையின்றி வீடியோ காலில் வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். முதலில் மறுத்த ஸ்வேதா அதன்பிறகு அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
இதனை பயன்படுத்தி கொண்ட அஸ்மகுமார், ஸ்வேதா நிர்வாண வந்த வீடியோக் காட்சிகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துள்ளார். இதன் மூலம், கடந்த ஒரு மாத காலமாக ஸ்வேதாவை செல்போனில் அழைத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
முதலில் பயந்துப்போன ஸ்வேதா, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது எனவும், தற்போது நான்கு மாத கர்ப்பமாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதை எதையும் எடுத்துக்கொள்ளாத அஸ்மகுமார், தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள், கணவன் ஆகியோருக்கு அனுப்பி விடுவேன் என்று அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி ஸ்வேதாவை மிரட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஸ்வேதா அஸ்மகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, தனது பேஸ்புக் நண்பர் அசோக்கிடம் இணைந்து திட்டம் தீட்டுகிறார். அதன்படி, கடந்த 24 ந்தேதி, பிரசாந்த் ஹில்ஸ் பகுதிக்கு அஸ்மகுமாரை டேட்டிங் அழைத்துச் சென்ற ஸ்வேதா, அசோக் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து அஸ்மகுமாரை சுத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து, நான்கு மாத கர்ப்பிணி பெண் ஸ்வேதா, அசோக் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அசோக் நண்பர் கார்த்திக் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்