மேலும் அறிய

G20 - S20 Conference: கோவைக்கு பெருமை: ஈஷா யோகா மையத்தில் G20 - S20 மாநாடு: சர்வதேச பிரதிநிதிகளுடன் சத்குரு கலந்துரையாடல்

கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல் மாநாடு கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது

கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல் மாநாடு (Science 20 Meet) கோவை ஈஷா யோகா மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள், சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் சத்குரு உடனான சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளனர்.

S20 குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் பசுமை எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகத்துடன் அறிவியலை இணைப்பது போன்ற தலைப்புகளில் ஏற்கனவே மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷாவில் நடக்கும் கூட்டத்தில் முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து அதுகுறித்து கலந்துரையாட உள்ளனர்.

ஈஷாவில் G20 மாநாடு நடக்க இருப்பது தொடர்பாக சத்குரு அவர்கள் கூறுகையில், “G20 கூட்டங்கள் ஆன்மீக மையம் உட்பட பல்வேறு விதமான இடங்களில் நடத்தப்படுவது மிகவும் சிறப்புக்குரியது. பாரதத்தை உணர்வதற்கு இது சிறந்த வழியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

G20 பிரதிநிதிகளின் 2 நாள் சந்திப்பில் யோக அறிவியல் குறித்த கல்வி அமர்வும் இடம்பெற உள்ளது. இந்த அமர்வை ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும், விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மையத்தின் (Sadhguru Center for a Conscious planet) இயக்குநருமான டாக்டர்  பாலசுப்பிரமணியம் நடத்த உள்ளார்.

G20 - S20 Conference: கோவைக்கு பெருமை: ஈஷா யோகா மையத்தில் G20 - S20 மாநாடு: சர்வதேச பிரதிநிதிகளுடன் சத்குரு கலந்துரையாடல்

மேலும், சர்வதேச பிரதிநிதிகள் ஈஷாவில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களான தியானலிங்கம், லிங்கபைரவி, தீர்த்த குண்டங்கள் ஆகிய இடங்களுக்கும் செல்ல உள்ளனர். சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் களரிப் பயட்டு மற்றும் பரத நாட்டியத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்ற உள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகள் இன்று காலை முதலே ஈஷாவிற்கு வருகை தர தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget