குரூப் 1 தேர்வு....எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு இலவசப் பயற்சி...தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பலன் பெறும் வகையில், குரூப் 1 தேர்வை எழுத விரும்புபவர்களுக்கு இலவசப் பயற்சி வழங்க The people's education trust/ டாக்டர் அம்பேத்கர் அகாதெமி, திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பலன் பெறும் வகையில், குரூப் 1 தேர்வை எழுத விரும்புபவர்களுக்கு இலவசப் பயற்சி வழங்க The people's education trust/ Dr. Ambedkar academy திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
குரூப் 1 முதன்மைத் தேர்வு, வரும் அக்டோபர் 30ஆம் தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவசப் பயற்சி வழங்கப்படவுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அகாதெமி L-73, 24ஆவது தெரு, காவேரி காலணி, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 600102 என்ற இடத்தில் இலவசப் பயிற்சி வழங்கபடவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பயற்சி வழங்கப்படும் என்றும் இரண்டரை மாதங்களுக்கு இது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற விரும்பும் எஸ்சி எஸ்டி மாணவர்கள், ஜூலை 30 அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். ambedkaracademy22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். பயற்சி பெற விரும்பும் மாணவர்கள் நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம் அல்லது 9790794968/9840591300 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (குரூப் - 1) முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகின. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் தேர்வுக்கு 137 பேர் தேரு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர்.
இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர், அக்டோபர் 30ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு எழுதிய 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேரில், முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்