Foxconn Chennai: ஸ்ரீபெரும்புதூர் ஆலை நிர்வாகத்தை கூண்டோடு மாற்றுகிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம்!
செல்ஃபோன் உதிரி பாக ஆலையில் நிர்வாகிகளை மாற்றுவதற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இயங்கிவருகிறது.
இங்கு ஆப்பிள் நிறுவன செல்ஃபோன்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. மேலும் இந்த நிறுவனத்தில் ஐந்தாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் தொழிற்சாலையை சுற்றி இருக்கும் பல்வேறு இடங்களில் தங்கி பணியாற்றிவருகிறார்கள்.
அந்தவகையில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் திருவள்ளூரை அடுத்த ஜமீன் கொரட்டூரில் உள்ள விடுதியில் தங்கியிருக்கின்றனர். இந்த விடுதியை ஃபாக்ஸ்கான் நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விடுதியில் கடந்த 14ஆம் தேதி உணவு சாப்பிட்ட பெண்களில் 159 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும் சில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதனையடுத்து ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் கடந்த 18ஆம் தேதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Foxconn, Apple say worker dorms for India iPhone plant don't meet required standards https://t.co/e05sF8ddtY pic.twitter.com/0TKZTQlrr8
— Reuters (@Reuters) December 29, 2021
இந்த சூழலில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாதது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செல்ஃபோன் உதிரிபாக ஆலையில் நிர்வாகிகளை மாற்ற ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், ஸ்ரீபெரும்புத்துர் ஆலையை ஆய்வுக்குட்படுத்தியுள்ளதாக ஆப்பிள் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: TN Gold Loan Waiver: யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? பட்டியல் இதோ!
‛இவ்வுலகை காப்பவளுக்கு இன்சூரன்ஸா?’ எக்ஸ்ப்ரி ஆன காரில் லக்ஸரி பயணம் செய்து வரும் அன்னபூரணி அம்மா!