நொச்சிக்குப்பம் கடற்கரையில் குவியல் குவியலாக செத்து கிடக்கும் மீன் குஞ்சுகள்
விழுப்புரம்: மரக்காணம் அருக நொச்சிக்குப்பம் கடற்கரையில் குவியல் குவியலாக செத்து கிடக்கும் மீன்குஞ்சுகள் மீன்பிடி தடைகளும் முடிந்தும் மீன்கள் பெரியதாகவில்லை மீனவர்கள் சோகம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருக நொச்சிக்குப்பம் கடற்கரையில் குவியல் குவியலாக செத்து கிடக்கும் மீன்குஞ்சிகள், மீன்பிடி தடைகளும் முடிந்தும் மீன்கள் பெரியதாகவில்லை மீனவர்கள் சோகம், தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்கள் விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன் பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் மீன்வளத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், மீன் பிடித் தொழிலில் ஈடுபடுவோருக்கு தொடா்ந்து மீன்கள் கிடைத்திடும் வகையிலும் மத்திய அரசால் வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் 2 மாதங்களுக்கு அமல்படுத்தப்படுகிறது, ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரு மாத காலத்துக்கு மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஆழ்கடலில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்கு தமிழகம் மற்றும் புதுவையில் தடை விதிக்கப்படும்.
தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். கிழக்கு கடற்கரைப் பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளில் கடந்த ஏப்ரல்15-ம் தேதி மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், கடந்த 2 மாதங்களாக விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் விசைப்படகுகளை கரையோரம் கட்டி வைத்திருந்தனர்.
இந்தத் தடைக் காலத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட 6,000 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாது. தமிழகத்தின் வட மாவட்டமான திருவள்ளூர் முதல், தெற்கில் கன்னியாகுமரி வரை தமிழக அரசால் இத்தடைக் காலம் செயல்படுத்தப்படுகிறது. தடையை மீறி மீன் பிடிப்பவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம், 1983, பிரிவு 5-ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மீன்பிடித் தடைக் காலத்தை ஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் - நவம்பர் - டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மாற்ற வேண்டும் என, பல்வேறு மீனவ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடி தடைகளும் முடிந்து மீன் பிடிக்க சென்றனர், அவர்கள் மீன் பிடி வலையில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் மாட்டிக் கொள்கின்றன, தற்போது வரை மீன்கள் பெரியதாக வில்லை, எனவே எங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர், மேலும் மீன் குஞ்சுகள் இறந்து கிடப்பது மீனவர்களுக்கிடையே சோகத்தை ஏர்படுத்தியுள்ளது. மீன் குஞ்சுகள் இறப்பிற்கான காரணம் தெரியாத நிலையில், அது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.