Police Protection For Ishwarya home: 'பர்ஹானா' பட எதிர்ப்பு எதிரொலி; நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா திரைப்படத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
![Police Protection For Ishwarya home: 'பர்ஹானா' பட எதிர்ப்பு எதிரொலி; நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..! Farhana movie controversy police protection at aishwarya rajesh residence kollywood tamil cinema latest update Police Protection For Ishwarya home: 'பர்ஹானா' பட எதிர்ப்பு எதிரொலி; நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/14/491565e191fe73d7f53cf8135f14765c1684062835238333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பர்ஹானா திரைப்படம்:
கணவர், குடும்பம் குழந்தைகள் என கறாரான இஸ்லாம் குடும்பப் பெண் ஃபர்ஹானா, வீட்டின் வறுமை காரணமாக கால் சென்டர் ஒன்றிற்கு வேலைக்குச் செல்கிறார். இதற்கிடையே குழந்தைக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படவே, பணத்தேவைக்காக கம்பெனிக்குள்ளேயே வேறொரு இடத்திற்கு மாறுதல் ஆகிறார்.
அங்கு சென்ற பின்னர்தான் அது ஆண்கள் தங்களுடைய இச்சைத்தேவைக்காக பேசும் இடம் என்பது அவருக்கு தெரிய வருகிறது. இதை அறிந்ததும், ஃபர்ஹானா உடனே அங்கிருந்து மாற வேண்டும் என நினைக்கும் போது, அவருக்கு ஒரு நபரிடம் இருந்து கால் வருகிறது. சற்று வித்தியாசமாக பேசும் அவரிடம் பர்ஹானா அவர் மனதை பறி கொடுக்கிறார். இதனிடையே அங்கு வேலை செய்யும் பெண் ஒருவர் இப்படி போன் பேசிய ஒருவருடன் சென்று உயிரை பறிகொடுக்கிறார். இதனால் பயந்து போகும் ஃபர்ஹானா அவர் மீது வைத்த பிரியத்தை அப்படியே கட் செய்து விட முடிவு செய்கிறார். ஆனால் கால் செய்தவர் விடுவதாக இல்லை. அதன் பின்னர் ஐஸ்வர்யாவின் நிலை என்ன என்பது தான் படத்தின் மீதி கதை.
ரசிகர்கள் கருத்து:
ஒரு சாதாரண கதையை இஸ்லாம் குடும்பப்பெண்ணையும், அவளது வாழ்வியல் நெறிமுறைகளையும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். அந்தக்கலவை இந்தக்கதைக்கு நன்றாகவே கை கொடுத்து இருப்பதாக தெரிவிக்கின்றனர் சினிமா ரசிகர்கள்.
படம் பார்த்த பல ரசிகர்கள் படம் மிகச் சிறப்பான படம் என்றும் எந்த விதமான மத துவேஷமும் இந்த படத்தில் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் ஒரு சில பிரிவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் இந்த படம் குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த படம் எந்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் உருவாக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தது. இருந்த போதிலும் ஒரு தரப்பினர் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பர்ஹானா திரைப்படத்தின் காட்சிகள் ஒரு சில திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது.
மேலும் படிக்க
மரக்காணத்தில் பதற்றம்: கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி... 3 பேர் உயிரிழப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)