மேலும் அறிய

Karnataka: கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் இவரா ?.. இன்று கூடுகிறது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்..!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இன்று அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இன்று அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்ற தேர்தல் திருவிழா நிறைவடைந்துள்ளது. மார்ச் 29 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் பிரச்சாரங்கள் களைக்கட்டியது. இதனைத் தொடர்ந்து மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வழக்கத்தை விட அதிகமாக 73.19% வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. 

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இழுபறி நீடித்தது. அதனைத் தொடந்து இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. 11 மணி வரை காங்கிரஸ், பாஜக இருகட்சிகளும் ஓரளவு சமமான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. அதன்பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. 

இறுதியாக வெளியான தோ்தல் முடிவின் படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவு வேட்பாளரான முன்னாள் விவசாய சங்கத் தலைவர் புட்டண்ணய்யாவின் மகன் தர்ஷன் புட்டண்ணய்யா மேல்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றதால் அதையும் சேர்த்தால் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 136 ஆக உள்ளது. 

அதேசமயம் பாஜக 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் யார் முதலமைச்சராக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அல்லது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இருவரில் யாருக்கு பதவி கிடைக்கப் போகிறது என தொண்டர்கள் ஆர்வமுடன் உற்றுநோக்கியுள்ளனர். 

இந்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக அகில இந்திய காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் பெங்களூரு வருகை தந்துள்ளனர். மேலும் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா வருகிற  மே 17 ஆம் தேதி அல்லது 18 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சருக்கான பதவிக்கு சித்தராமையா,  டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவுவதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் பேமெண்ட்டில் இருந்து பின்வாங்கும் மக்கள்! ரொக்கத்திற்கு திரும்பக் காரணம் என்ன?
டிஜிட்டல் பேமெண்ட்டில் இருந்து பின்வாங்கும் மக்கள்! ரொக்கத்திற்கு திரும்பக் காரணம் என்ன?
UPI Transaction Failed: அக்கவுண்டில் பணம் இருந்தும் UPI வேலை செய்யவில்லையா? இதுதான் காரணம்!
UPI Transaction Failed: அக்கவுண்டில் பணம் இருந்தும் UPI வேலை செய்யவில்லையா? இதுதான் காரணம்!
E20 பெட்ரோல் பிரச்சனைக்கு மத்திய அரசின் புதிய தீர்வு: வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்!
E20 பெட்ரோல் பிரச்சனைக்கு மத்திய அரசின் புதிய தீர்வு: வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்!
CM Vijay: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; உடனடியாக மீட்க உத்தரவு போட்ட முதலமைச்சர் விஜய்! உதவி எண்களும் அறிவிப்பு!
CM Vijay: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; உடனடியாக மீட்க உத்தரவு போட்ட முதலமைச்சர் விஜய்! உதவி எண்களும் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Watch Video: வேலைக்காரன் மட்டுமில்லடா.. மூளைக்காரனும் நான்.. ஸ்கெட்ச் போட்டு இலங்கை வீரரை காலி செய்த மானவ் சுதர்! வீடியோ பாருங்க
Nepal Flood: பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
பேரழிவை ஏற்படுத்திய நேபாள திடீர் வெள்ளம்; பரபரப்பு வீடியோ; சிக்கிய 57 தமிழர்களின் கதி என்ன.?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...
Minister Anand : ’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
Pulsar 150 New Vs Old Model: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான புதிய பஜாஜ் பல்சர் 150; பழைய மாடலைவிட சிறந்ததா.? இதோ முழு ஒப்பீடு
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான புதிய பஜாஜ் பல்சர் 150; பழைய மாடலைவிட சிறந்ததா.? இதோ முழு ஒப்பீடு
Kia Sonet on EMI: ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ.1.3 லட்சம் முன்பணம் கொடுத்தா அசத்தலான கியா சோனெட் கார வாங்கலாம்; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
Embed widget