ABP Nadu Exclusive : ‛சன் பிக்சர்ஸ் படத்துல பிரச்சனை பண்ணா... போலீஸ் தன் கடமையை செய்யும்’ -கடலூர் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பேட்டி!
‛‛சன் பிக்சர்ஸ் படம், வேற மாதிரி போயிடும். அரசியல் ரீதியா சன் பிக்சர்ஸ் பாத்துப்பாங்க... ஆப் பண்ணிடுவாங்க. அதை மீறி பிரச்சனை பண்ணா, காவல் துறை தன் கடமையை செய்யும்’’
2 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் சூர்யாவின் திரைப்படமான எதிர்க்கும் துணிந்தவன், நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. ஜெய்பீம் விவகாரத்தில் பாமகவின் எதிர்ப்பை பெற்றதால், சூர்யாவின் திரைப்படங்களுக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நாளை தியேட்டரில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளப்பி வருகிறது பாமக. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு வன்னியர் அமைப்புகள் சார்பில், மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்திற்கான தியேட்டர் புக்கிங் கடலூரில் மந்தமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, கடலூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பிரபாத்திடம் ஏபிபி நாடு சார்பில் பிரத்யேக பேட்டி எடுக்கப்பட்டது. இதோ அவரது பேட்டி...
கேள்வி: ‛எதற்கு துணிந்தவன்’ நாளை வெளியாகிறது... எப்படி இருக்கிறது கடலூரின் நிலை?
பதில்: எப்போதும் போல நார்மலா இருக்கிறது. விளம்பரத்திற்காக பாமகவினர், தியேட்டர்களில் மனு அளித்திருக்கிறார்கள். இது சன் பிக்சர்ஸ் படம், கண்டிப்பா வெளியாகும். கடலூர் கிருஷ்ணா தியேட்டரில் 100 சதவீதம் ஹவுஸ்புல் ஆகும்.
கேள்வி: மற்ற தியேட்டர்களில் இன்னும் புக்கிங் நடைபெற வில்லை என்கிறார்களே?
பதில்: அது பற்றி எனக்கு தெரியவில்லை. மற்ற தியேட்டர்களின் நிலை பற்றி எனக்கு தெரியவில்லை. அனைவரும் ரிலீஸ் செய்வார்கள் என்றே தான் நினைக்கிறேன். அனைத்து தியேட்டர்களிலும் இங்கு எதற்கு துணிந்தவன் ரிலீஸ் ஆகும்.
கேள்வி: போலீஸ் தரப்பில் இன்னும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்கிறார்களே?
பதில்: இது சன் பிக்சர்ஸ் படம். தள்ளிப் போறதுக்கும், நிராகரிக்கவும் வாய்ப்பில்லை. கடலூரில் மட்டும் தான் இந்த பிரச்சனை. பாமகவினர் தியேட்டர்களுக்கு மனு கொடுத்திருக்கிறார்கள். படம், சன் பிக்சர்ஸ் படம், வேற மாதிரி போயிடும். அரசியல் ரீதியா சன் பிக்சர்ஸ் பாத்துப்பாங்க... ஆப் பண்ணிடுவாங்க. அதை மீறி பிரச்சனை பண்ணா, காவல் துறை தன் கடமையை செய்யும். ‛நான் சொல்வது புரியுதா’. கடமையை செய்யும். ஜெய்பீம் படம் முடிந்து போச்சு. அதை வெச்சிட்டு பண்ணா என்ன செய்ய முடியும். மாவட்டத்தில் நாலஞ்சு பேர் தான் பிரச்சனை பண்றாங்க. சூறரை போற்று, ஜெய் பீம் போல இந்த படமும் ஹிட் ஆகிடும். பாமக எதிர்ப்பு செய்ய செய்ய, எங்களுக்கு படம் நல்லா ஓடும்.
கேள்வி: பாமக எதிர்ப்பால் டிக்கெட் புக்கிங் பாதிப்பு என்கிறார்களே?
பதில்: அதெல்லாம் இல்லை சார். எப்போதுமே ரசிகர்கள் வந்து கொண்டாடுவார்கள். 2 ஆண்டுகளுக்குப் பின் அண்ணன் படம் வருவது. இவர்கள் இப்படி செய்வதால் , படம் இன்னும் பாப்புளர் ஆகும். எந்த பிரச்சனையும் படத்திற்கு வராது.
கேள்வி: வழக்கம் போல தான் இந்த படத்தின் கொண்டாட்டமும் இருக்குமா
பதில்: நாங்கள் அனைத்தும் ரெடியாக வைத்திருக்கிறோம். போலீஸ் என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ் சொல் படி நடப்போம். காலை 7:15 மணி ஷோ எடுத்துள்ளோம்.
கேள்வி: தலைமையில் இருந்து ஏதாவது அறிவுறுத்தியிருக்கிறார்களா?
பதில்: பேசியிருக்கிறார்கள். நீங்கள் யாரிடமும் பிரச்சனை செய்ய வேண்டாம். டிக்கெட் எடுத்து படத்தை பார்த்துவிட்டு வாருங்கள். வெளியில் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்கள். போலீஸ் பாதுகாப்பு இருக்கும். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், நீங்கள் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்கள். அதை மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளேன்.
இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதோ அந்த பேட்டியின் வீடியோ பதிவு....
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்