மேலும் அறிய

Naam Tamilar Party: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வழக்கம்போல அடடா சொல்ல வைக்கும் நாம் தமிழர் கட்சி.. வாக்கு நிலவரம் என்ன?

Erode East Bypoll 2023 Result, NTK: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவை பின்னுக்குத்தள்ளி நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது.

Erode East Bypoll 2023 Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவை பின்னுக்குத்தள்ளி நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் நடைபெற்றது.  மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 74.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலில், இத்தொகுதியில் 69.58% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். இதனால் மாலை 6 மணிக்கு மேலும் டோக்கன் வைத்திருந்த மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவுக்கு பின் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை முறையாக சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட அனைத்தும் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டது. 238 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து இயந்திரங்களும் பத்திரமாக காப்பு அறையில் வைக்கப்பட்டது. இதையடுத்து சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி, சிசிடிவி கேமிராக்கள் மூலமும் பாதுகாப்பு படையினராலும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை ராணூவப்படையினர், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் சித்தோடில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி எலவுமலை, சுண்ணாம்பு ஓடை உள்ளிட்ட பகுதிகளில் 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 19,964, அதிமுக - 7,412, நாம் தமிழர் -1,321, தேமுதிக - 194 வாக்குகள் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் இரண்டாம் இடத்தில் 7 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், ஆயிரம் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளது. பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தேமுதிகவை பின்னுக்குத்தள்ளி நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

Erode East By Election Result LIVE: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை...கெத்து காட்டும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்...!

Assembly Election Results 2023 LIVE: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்: மேகாலயாவில் பாஜக பின்னடைவு; என்.பி.பி முன்னிலை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget