Assembly Election Results 2023 LIVE: பாஜகவுக்கு ஏறுமுகம்; நாகலாந்தில் தனித்து ஆட்சி! திரிபுராவில் கூட்டணி ஆட்சி..!
Assembly Election Results 2023 LIVE Updates: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் விவரங்களை உடனுக்குடன் அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்...
LIVE
Background
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா நாகலாந்து ஆகியவற்றின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
திரிபுரா சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி,16- ஆம் தேதி நடைபெற்றது. மேகாலயா, நாகலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி ,27 ஆம் தேதி நடந்தது.
மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்.
திரிபுரா
ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்டது திரிபுரா மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்தது.
அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது, ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் ஐபிஎஃப்டி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
திரிபுராவில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாஜக பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதான எதிர்க் கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. இந்த கட்சிகளை தவிர்த்து மூன்றாவது முக்கிய கட்சியாக இருப்பது புதிதாக தொடங்கப்பட்ட திப்ரா மோதா கட்சி.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் திரிபுராவில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணித்துள்ளன. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேகாலயா
60 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. மேகாலயாவிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அங்கிருக்கும் தேசிய மக்கள் கட்சிக்கும் செல்வாக்கு அதிகம் என்பதால் இரண்டு கட்சிகளில் பெரும்பான்மை யாருக்கு என்ற போட்டி உள்ளது.
நாகலாந்து
நாகாலாந்திலும் NDPP - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகளும் அதையே சொல்கின்றனர்.
மூன்று மாநிலங்களையும் சேர்த்து 180 தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிகை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று மாநிலங்களிலும் யார் ஆட்சியைக் கைப்பற்றபோவது யார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேகாலயாவில் பாஜகவை நாடும் தேமக..!
மேகாலாயாவில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 26 இடங்களில் வெற்றி பெற்று முதலிடம் வகித்தாலும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை தேமகவுக்கு இல்லை. எனவே சுயேட்சைகளிடமும், பாஜகவிடமும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். இந்த தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திரிணாமூல் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகலாந்தில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை..!
நாகலாந்தில் பாஜக 37 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
திரிபுராவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் பாஜக..!
திரிபுராவில் பாஜக கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளனர். இங்கு, சிபிஎம் கூட்டணி 14 இடங்களிலும், திமோக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மூன்று மாநில தேர்தல்: உரையாற்ற உள்ள பிரதமர் மோடி..!
மூன்று மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா வெற்றி..!
தெற்கு தூரா தொகுதியில் போட்டியிட்ட மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றுள்ளார்.