Erode East By Election Result LIVE: 65 ஆயிரத்து 575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி..!
Erode East By Election Result 2023 LIVE Updates: கடந்த ஜனவரி 4ஆம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார். தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
LIVE
Background
Erode East By-Election Result 2023 LIVE Updates:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர், மூத்த தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவெரா (46). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 41 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு திருமகன் ஈவெரா சென்றார்.
இதையடுத்து கடந்த ஜனவரி 4ஆம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார். தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதாவது பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலும் நடைபெற்றது. காலை 7.30 மணிக்குத் தொடங்கிய தேர்தல் இரவு 9.30 மணிவரை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிட்டார்.
இந்தத் தேர்தல் எவ்வித சலசலப்புமின்றி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தேர்தலில் 74.78 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், நாளை (மார்ச்.02) ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடகியது, ஏராளமான காவல் துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தல் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழைப் பெற்றார் ஈவிகேஎஸ்
இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.
1 சதவீத வாக்குகளைக் கூட பெறாத தேமுதிக..!
இடைத்தேர்தலில் தேமுதிக 0.84 சதவீத வாக்குகள் பெற்றுள்ளனர்.
இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! - முதலமைச்சர் அறிக்கை..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையொட்டி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல இந்த ஆட்சியின் வெற்றி கழகத்தின் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
வீடு வீடாகச் சென்று நன்றி சொன்ன அமைச்சர்கள்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து திமுக அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.
அண்ணா அறிவாலயத்தில் குவியும் திமுக தலைவர்கள்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தூத்துகுடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, அமைச்சர்கள் பொன்முடி, பெரியசாமி, நேரு ஆகியோர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குவிந்து வருகின்றனர்.