DVAC Raid: வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்! அதிரடி காட்டும் அதிகாரிகள்! - எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜய்பாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக தலைமையிலான அரசு பல்வேறு ஊழல் புகார்களை பதிவு செய்து வருகின்றனர். அந்தப் புகார் தொடர்பான ரெய்டுகளும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இவர்கள் மீது பதிவு செய்துள்ள எஃபைஆர் என்ன?
விஜயபாஸ்கர் மீது உள்ள புகார்:
அதிமுக ஆட்சியில் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தன்னுடைய பதவி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு சான்றிதழ் ஒன்றை அளித்துள்ளார். அதாவது அந்த மருத்துவமனை புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதியான ஒன்று என்று Essentiality Certificate வழங்கியுள்ளார். இந்த சான்றிதழை வாங்கும் போது அந்த மருத்துவமனை 300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டு வருடங்களாக செயல்பட்டு வந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு... அதிகாலையே அதிரடி... https://t.co/wupaoCzH82 | #vijayabaskar #dvacraid #aiadmk #admk #abpnadu #Abp #abpnews pic.twitter.com/HdwnRoDapU
— ABP Nadu (@abpnadu) September 13, 2022
இந்த அனுமதி சான்றிதழ் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை புகாரை பதிவு செய்துள்ளது. மேலும் இந்தப் புகார் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் , மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் ஆகியவற்றில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலுமணி மீது உள்ள புகார்:
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பணியாற்றி வந்தார். அப்போது தெரு விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி பல்புகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சேலம், தர்மபுரி,திருச்சி, நாகபட்டினம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகள் வாங்கிய டெண்டரில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது.
3வது முறையாக எஸ்.பி வேலுமணி வீட்டில் DVAC ரெய்டுhttps://t.co/wupaoCzH82 | #spvelumani #dvacraid #aiadmk #dmk #abpnadu #ABPNews #ABP pic.twitter.com/70bHSQcaIF
— ABP Nadu (@abpnadu) September 13, 2022
அதன்படி இந்த 5 மாவட்டங்களில் சந்தை விலையைவிட மிகவும் அதிகமான விலைக்கு எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சுமார் 74 கோடியே 58 ஆயிரத்து 700 ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட 26 இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது.