மேலும் அறிய

Mettur Dam: அதிரடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 227 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 43 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 227 கன அடியாக அதிகரித்துள்ளது.

Mettur Dam: அதிரடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 227 கன அடியாக உயர்வு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 39.75 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 11.96 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டு போதிய நீர் மேட்டூர் அணையில் இல்லாத காரணத்தினால் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: அதிரடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 227 கன அடியாக உயர்வு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”சென்னைக்கு வாங்க வருண்”ஸ்டாலின் போடும் MASTERPLAN! டார்கெட் தவெக விஜய்
CM MK Stalin Health Condition | CM ஸ்டாலின் உடல்நிலை..APOLLO வெளியிட்ட  அறிக்கை! எப்போது டிஸ்சார்ஜ்?
Jagdeep Dhankhar Resign | நாடாளுமன்றம் முதல் நாள்..ஜகதீப் தன்கர் ராஜினாமா! நடந்தது என்ன?
விஜய்-க்கு செல்வாக்கு இருக்கா? மகன் மிதுன் கொடுத்த REPORT! EPS போடும் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
Thailand Cambodia Dispute: மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 25-ம் தேதி மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ள இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
சென்னையில ஜூலை 25-ம் தேதி மின்சார துண்டிப்பு செய்யப்பட உள்ள இடங்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
நடுவானில் மாயமான ரஷ்ய விமானம்! பயணிகளின் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
Maruti Fronx: ஏற்றுமதியில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் - அப்படி என்ன இருக்கு இந்த கார்ல.?
ஏற்றுமதியில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் - அப்படி என்ன இருக்கு இந்த கார்ல.?
Embed widget