கிடைக்கும் ரூ.400யை தெரு நாய்களுக்கு செலவிடும் மீன் வியாபாரி
மீன் விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தில் தினசரி ரூ 400 செலவு செய்துஆதரவின்றி திரியும் தெரு நாய்களுக்கு மீன் வியாபாரி ஒருவர் கருணை காட்டி வருகிறார். அவரது இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தினசரி மீன் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் ரூ 400 செலவு செய்து தெருநாய்களுக்கு உணவு அளித்து கருணை காட்டும் மீன் வியாபாரி.
மீன் விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தில் தினசரி ரூ 400 செலவு செய்து
ஆதரவின்றி திரியும் தெரு நாய்களுக்கு மீன் வியாபாரி ஒருவர் கருணை காட்டி வருகிறார். அவரது இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருவாரூர் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரெங்கராஜ் (34). இவரது சொந்த ஊர் மதுரை. இவரது மனைவி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இதற்காக மதுரையில் வசித்து வந்த இவர்களது குடும்பம் கடந்த 2014ஆம் ஆண்டு திருவாரூரில் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறது. இந்த நிலையில் தனது சொந்த ஊரான மதுரையில் செய்த மீன் வியாபாரத்தை திருவாரூரில் செய்துவரும் ரெங்கராஜன் மதுரையில் செய்த கருணை பணியையும் திருவாரூரில் தொடங்கினார். மீன் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் தினமும் ரூ.400 செலவு செய்து தெருநாய்களுக்கு மதியம் மற்றும் இரவு வேளைகளில் உணவு அளிப்பது தான் அந்தப் பணி.
மதிய நேரத்தில் சாதம் மற்றும் முட்டை கலந்த உணவையும் மாலை நேரத்தில் ரொட்டியும் கொடுப்பார். இத்தகைய கருணை பணியை இடைவிடாது திருவாரூரில் செய்து வருகின்ற ரெங்கராஜன் தற்போது ஊரடங்கு காரணமாக தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். கடந்தாண்டு முழுமையான ஊரடங்கு காலகட்டத்தில் ஒரு மாத காலம் நாய்களுக்கு உணவளிப்பதை மட்டுமே தனது பணியை மேற்கொண்டார். இதற்கு இவரது குடும்பத்தாரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து ரெங்கராஜன் கூறிய போது மனிதர்கள் தனக்கு வேண்டிய உதவிகளை கேட்டு பெற்று விடுவார்கள் ஆனால் வீட்டு விலங்குகள் தனது தேவையை மனிதர்களை அனுசரித்து தான் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது அதிலும் குறிப்பாக நாய்கள் நன்றியுள்ளவை. அத்தகைய நாய்களில் தெருநாய்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளன. அவற்றுக்கு உணவு அளிப்பதில் நிம்மதி கிடைப்பதோடு நம்மால் பல ஜீவராசிகள் உணவு உண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதே எனக்கு முழு திருப்தியாக உள்ளது. அந்த அடிப்படையில் இந்த பணியை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறேன். இதற்காக தினசரி ரூ 400 செலவு செய்து வருகிறேன் என்றார்.
தான் சம்பாதித்த தனது குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று இருக்கக்கூடிய காலத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை ஒதுக்கி அதற்காக செலவிடும் ரெங்கராஜன் போன்ற மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்ந்த தான் வருகிறார்கள் என்பதற்கு ரெங்கராஜன் ஒரு எடுத்துக்காட்டு...
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

