மேலும் அறிய

நாங்குநேரியில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக அரசின் மெத்தனத்தால் அப்பாவி உயிரிழப்பு - தினகரன் கடும் விமர்சனம்

பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - தினகரன்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய வெறியாட்டத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதவிட்டிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே போதையிலிருந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, அவ்வழியே பயணிப்போர் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இதே திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு பீடத்தில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தற்போது, பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் களைந்து பொதுமக்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய திமுக அரசு, அன்றாடம் அரங்கேறும் குற்றங்களைத் தடுக்க தவறியும், அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் உதவித் தொகை எனும் பெயரில் பணம் கொடுத்து மக்களை சரிக்கட்ட நினைப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் செல்லுபடியாகாது. 
 
எனவே, இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் அதே நேரத்தில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தைச் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிய திமுகவின் ஆட்டமும் கொட்டமும் வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைவது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நாங்குநேரியில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக அரசின் மெத்தனத்தால் அப்பாவி உயிரிழப்பு - தினகரன் கடும் விமர்சனம்
நாங்குநேரியில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக அரசின் மெத்தனத்தால் அப்பாவி உயிரிழப்பு - தினகரன் கடும் விமர்சனம்
OPS CAR DRIVER: ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வாய்கிழிய பேசும் திமுக.. சமூக மோதலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது- சீறும் அதிமுக, தவெக
வாய்கிழிய பேசும் திமுக.. சமூக மோதலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது- சீறும் அதிமுக, தவெக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Iran War US Order: ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
ஏதோ பெரிசா நடக்கப் போகுது.! அலறும் அமெரிக்கா; 14 நாடுகளில் இருந்து தங்கள் மக்கள் வெளியேற உத்தரவு
CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
Trump Arab Countries Iran: “மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
“மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
OPS CAR DRIVER: ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
Top 10 News Headlines: மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
Embed widget