மேலும் அறிய

கத்திபாரா பாலத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ?

கத்திபாரா சந்திப்பு சென்னையின் மிக முக்கியமான சந்திப்பு. வாகன ஒட்டிகளுக்கு அது ஒரு குட்டி மலையின் வளைவுகளில் செல்லும் ஒரு பயண அனுபவத்தை ஒவ்வொரு முறையும் தருவதாய் இருக்கும்.

தமிழகத்தின் தலை நகர் சென்னையில் உள்ள கத்திபாரா மேம்பாலம் தான் ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை(clover leaf) வடிவ மேம்பாலம் என்பது உங்களுக்கு தெரியுமா?. தமிழகம் தன்னகத்தே மிக நெடிய கட்டிடக்கலை வரலாற்றைக் கொண்டுள்ளது. பல்லவர்கள் காலம் தொடங்கி இன்று வரை கட்டிடக்கலை மீதான காதல் தமிழர்களின் வாழ்வியலில் ஒன்று. தொழிற்நுட்ப புரட்சி மற்றும் தொழில் துறை வளர்ச்சி கட்டடக்கலை துறையில் பல்வேறு வாயில்களை திறந்திருக்கின்றன. அதன் ஒரு படிமம் தான் கத்திபாரா மேம்பாலம். கத்திபாரா சந்திப்பு சென்னையின் மிக முக்கியமான சந்திப்பு. வாகன ஒட்டிகளுக்கு அது ஒரு குட்டி மலையின் வளைவுகளில் செல்லும் ஒரு பயண அனுபவத்தை ஒவ்வொரு முறையும் தருவதாய் இருக்கும்.

கத்திபாரா பாலத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ?

கிண்டி மேம்பாலம் என்று அழைக்கப்படும் கத்திபாரா GST சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் உள்வளைவு சாலை ஆகிய முக்கிய சாலைகளின் சந்திப்பு. கிண்டியில் உள்ள நான்கு முக்கிய சாலையின் சந்திப்பில் இருந்த  ரவுண்டானாவில் ஏற்பட்ட வாகன நெரிசலை சாமாளிக்க மேம்பாலம் கட்டும் திட்டம் 2005 ஆண்டின் வாக்கில் தொடங்கப்பட்டது. எவ்வித காத்திருப்பும் இன்றி வாகனங்கள் வேவ்வேறு திசைகளில் நான்கு முக்கிய சாலைகளுக்கும் செல்லும் விதமாக இரண்டு அடுக்கு மேம்பாலமாக Clover leaf வடிவத்திலான திட்ட வரைப்படம் தயாரனது. 2008 ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராய் இருந்த திரு.கருணாநிதி அவர்கள் ஆசியாவின் மிகப் பெரிய Clover Leaf வடிவுடைய மேம்பாலத்தை திறந்து வைத்தார். இன்று அந்த நான்கு சாலை சந்திப்பை மூன்றே நிமிடங்களில் கடந்து விடலாம், மேம்பாலம் கட்டும் முன்பு குறைந்தது முப்பது நிமிடம் காத்திருக்க வேண்டும். எப்படி சாத்தியமாயிற்று இது?. அறிவோம் க்ளோவர் இலை வடிவ மேம்பாலம் பற்றி.

கத்திபாரா பாலத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ?

வரைபடங்களிலோ அல்லது உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது இது க்ளோவர் இலை வடிவத்தை ஒத்ததாக இருப்பதனால் இது க்ளோவர் இலை வடிவ மேம்பாலம் அல்லது க்ளோவர் இலை பரிமாற்றம் என்று அழைக்கப்படுகிறது. க்ளோவர்லீஃப், இரண்டு, மூன்று அல்லது நான்கு தனிவழிகளை இணைப்பதற்கான எளிய வழி. வைர வடிவ பரிமாற்றங்கள்(Interchanges) கையாள முடியாத சிக்கலான சந்திப்பு சாலைகளில் க்ளோவர் இலை வடிவ மேம்பாலங்கள் உருவாக்கபடுகின்றன. அவற்றின் முக்கிய நன்மை என்னவென்றால் வாகனங்கள் எவ்வித காத்திருப்பும் இன்றி தடங்கல் இல்லாமல் இலகுவாக வெவ்வேறு திசைகளில் பயணிக்க முடியும். போக்குவரத்து சிக்னல்கள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தத் தேவையில்லை. இவை தடுப்புகள் உள்ள இருவழி சாலைகளாய் இருப்பதால் எதிர் வரும் வாகனகங்களின் இடையூறின்றி செல்ல முடியும். அதன் அடிப்படையிலேயே இவை தனி வழி(freeways) சாலைக்களுக்கான விருப்ப வடிவமாக தற்காலத்தில் மாறிப்போனது. இதன் முக்கிய சாரம்சம் என்னவென்றால் நீங்கள் முதல் வளைவை தவறவிட்டால் பாலம் மேல்ஏறி அடுத்த வளைவில் இறங்கி இரண்டும் அல்லது முறை சுற்றி உங்களுக்கான வளைவுக்கு செல்லலாம், அதுவும் எவ்வித காத்திருப்பும்ன்று, தடையும் இன்றி. க்ளோவர் இலை வடிவுடைய மேம்பாலங்களை வடிவமைக்க அதிக அளவிலான இடம் தேவைபடுவதே இதன் முக்கிய பின்னடைவு. பின்னாளில் அதை எதிர்கொள்ள பூங்காக்கள், பொது மக்கள் கூடும் இடங்கள் உள்ளடக்கிய வரைபடங்கள் அமைக்கப்பட்டன.

கத்திபாரா பாலத்தின் கதை தெரியுமா உங்களுக்கு ?

கத்திபாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதிகளில் தற்போது நடைப்பெற்று வரும் பணிகளை நாம் பார்த்திருப்போம், ஆம் அவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவான பூங்காக்கள், பார்க்கிங் வசதி, பேருந்து நிறுத்தம் போன்ற செயல்பாடுக்களுக்காக தயாராகி கொண்டிருக்கிறது. வேகமாய் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமல்ல, மெதுவாய் நடக்க விரும்பும் மக்களுக்குமாய் தன்னை புனரைமைத்து கொண்டிருக்கிறது ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவுடைய கத்திப்பாரா மேம்பாலம். இனி ஒவ்வொரு முறையும் கத்திபாரா மேம்பாலத்தில் செல்லும் போதும் நினைவில் கொள்வோம் நாம் பயணிப்பது கட்டிடக்கலையின் மகத்தான கண்டுப்பிடிப்பின் மீது என்று.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லி புதிய முதல்வராக அதிஷி தேர்வு; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி புதிய முதல்வராக அதிஷி தேர்வு; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு!
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு!
”தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்..” முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு தெரிவித்த வாழ்த்து..
”தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்..” முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு தெரிவித்த வாழ்த்து..
Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்
Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி புதிய முதல்வராக அதிஷி தேர்வு; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி புதிய முதல்வராக அதிஷி தேர்வு; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு!
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு!
”தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்..” முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு தெரிவித்த வாழ்த்து..
”தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்..” முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு தெரிவித்த வாழ்த்து..
Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்
Ravichandran Ashwin Turns 38: டெஸ்ட் கிரிக்கெட்டின் மாமன்னன்.. தமிழக சுழல் புயல்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்வின்
Delhi New CM: நாடே எதிர்பார்ப்பு! டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு
Delhi New CM: நாடே எதிர்பார்ப்பு! டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? இன்று வெளியாகிறது அறிவிப்பு
Samsung Protest : போராடும் சாம்சங் ஊழியர்கள்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை.. தொடரும் பதற்றம்...
போராடும் சாம்சங் ஊழியர்கள்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை.. தொடரும் பதற்றம்...
DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
DMK Pavala Vizha: இன்று திமுக பவள விழா - செயற்கை தொழில்நுட்பத்தில் கருணாநிதி வாழ்த்துரை - 75 வருட சாதனைப் பயணம்
ATM Card Tips: ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கைது - உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கை அணுகுவது எப்படி? விவரங்கள் இதோ..!
ATM Card Tips: ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கைது - உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கை அணுகுவது எப்படி? விவரங்கள் இதோ..!
Embed widget