Ma Subramanian: ’இதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' - ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் பதில் !
”இதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என தெரிவித்து ஆளுநர் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் கடந்து செல்ல முயற்சித்துள்ளார்.
ஐயப்ப கடவுளுக்கே உரித்தான பாடலாக பார்க்கப்படும் ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்டு நூறு ஆண்டுகள் ஆன நிலையில், அதனை கொண்டாடும் விதமாக சபரிமலை ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
”இந்தியாவை உருவாக்கியது சனாதனம்தான்.. அரசர்களும், ராணுவ வீரர்களும் அல்ல” : ஆளுநர் ரவி பேச்சு..
— Arunchinna (@iamarunchinna) June 12, 2022
இது குறித்து கேள்விக்கு அமைச்சர் @Subramanian_ma மதுரை விமான நிலையத்தில் கூறியது..,” இதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார்.@SRajaJourno | @ManiTamilMP | pic.twitter.com/b2I458OcRE
அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, “ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதையே நமது மார்க்கம் கூறுகிறது. மற்ற நாடுகளைப் போல ராணுவவீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாடு உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவானது.” என தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் கொரானா கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சூழ்நிலை இல்லை. தமிழகத்தில் தினந்தோறும் 15000 பேருக்கு மேலாக கொரானா பரிசோதனை எடுக்கப்படும் நிலையில் தற்போது இரண்டு சதவீதம் அளவுக்கு கொரான பாதிப்புகள் உள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலை இல்லை. மதுரையில் அமைச்சர்மா.சு பேட்டி
— Arunchinna (@iamarunchinna) June 12, 2022
இந்நிலையில் மதுரை மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக ஆளுநர் பேசியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன்..,” இதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என தெரிவித்து கடந்து செல்ல முயற்சித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீஙக பாஸ் - மாணவியிடம் நிர்வாண வீடியோ கால்: கொதித்தெழுந்த மாணவிகள்! பாஜக தாளாளர் கைது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்