Omicron BA 4: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா! அமைச்சர் சொன்ன புதுத்தகவல்!!
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வரை கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வரை கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை வந்து சென்றுவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்த வகை தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தமிழகத்தில் பரவியுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தில் உள்ள அவரது தாயார் மற்றும் சகோதரியை பரிசோதனை செய்து இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா பரவி உள்ளதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தும்.
#BREAKING | தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 கொரோனா வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது https://t.co/wupaoCQKa2 | #Omicron #Corona #B4Virus #TNCorona pic.twitter.com/tP5lrl1qM3
— ABP Nadu (@abpnadu) May 21, 2022
தற்போது தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட நபர் குணமாகி வருகிறார். இந்த புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்