மேலும் அறிய

Chidambaram : சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..

பக்தர்களின் கோரிக்கையின்படியும் இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் தடை விதித்தது சர்ச்சையான நிலையில் தற்போது அனுமதி அளித்து அரசு அறிவித்துள்ளது. தொற்றுதொட்டு இருந்துவந்த பழக்கவழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கையின்படியும் இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள் அரசாணையில், ’’இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் மற்றும் நகரில் உள்ள அருள்மிகு சபாநாயகர் (நடராஜர்) திருக்கோயிலில் உள்ள கனகசபை மண்டபத்தின் மீதேறி குறைந்த இடைவெளியில் அருள்மிகு சபாநாயகரை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி திரு.எம்.என்.ராதா கிருஷ்ணன் என்பவரால் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட W.P.9447/2022 வழக்கில், 20.04.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, கோவிட் – 19 தற்போதைய நிலை மற்றும் இதர காரணங்களையும் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஆலோசித்து முடிவு செய்ய உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், இத்திருக்கோயிலானது பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர் எனவும், இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும் எனவும், இத்திருக்கோயிலில் அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபையானது (பொன்னம்பலம்) மனித உடலில் இதயம் அமைந்துள்ளதை போன்று சற்று இடப்புறமாக அமைந்துள்ளது எனவும், அவருக்கு முன்னுள்ள படிகள், பஞ்சாச்சர படிகள் எறும், சிவமந்திரமான நமசிவாய என்பதை குறிப்பதாகவும், கனகசபை கட்டிடத்தின் தூண்கள், மேற்பலகைகள், குறுக்குபலகைகள், மேலே பதிக்கப்பட்டுள்ள ஓடுகள், அதில் பயன்படுத்தப்பட்ட ஆணிகள் மற்றும் அர்த்தமண்டப அமைப்பு ஆகியவை மனித சுவாச, இரத்த நாளங்கள் மற்றும் உடல் இயக்கங்களை குறிப்பதாகவும் இவை ஆகமம். சாஸ்திரங்களை தொடர்புபடுத்துவதாக அமைந்துள்ளதாக திருக்கோயிலின் சிறப்பினை மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இத்திருக்கோயிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து அருள்மிகு சபாநாயகரையும் அருகே உள்ள சிதம்பர இரகசியத்தையும் தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்துள்ளது எனவும். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல், சாமிகளை தொட்டு தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு, கோயில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர் எனவும், தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள் மீண்டும் தொடரும் நிலையில், சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாகவும். இதனால் பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டும். பல்வேறு அமைப்புகள் சர்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், பக்தர்களிடம் தட்சிதர்கள் நடந்துக்கொண்ட செயல்பட்டு குமித்து குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும். சிதம்பரம் கோட்டாட்சியரால் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் தீட்சிதர்கள் பக்தர்களை கணகாடையில் அனுமதிப்பதில்வை சளவும் மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார். எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலின் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
Embed widget