கடலூரில் அதிர்ச்சி! ரூ.7.5 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்: காத்திருக்கும் மர்மம்
கடலூர்: சிதம்பரத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் என்ற திமிங்கல எச்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திமிங்கல எச்சம் பறிமுதல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் தச்சன்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டதில், 7 கிலோ 600 கிராம் எடையுள்ள திமிங்கல எச்சம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, திமிங்கல எச்சத்தையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம் திருவிழுந்தூரைச் சேர்ந்த ராஜசேகர் (28) என்பவரை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய வேதாரண்யம் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பர்கிரீஸ் என்றால் என்ன ?
ஏம்பர்கிரீஸ் என்று சர்வதேச அளவில் அழைக்கப்படும் திமிங்கலம் எச்சம், அல்லது திமிங்கல வாந்தி என்பது கடல் பகுதியில் திமிங்கலத்திற்கு ஜீரணம் ஆகாமல் உமிழும் பொருளாகும். இது கடல் தண்ணீர், வெப்பம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஏம்பர்கிரீஸ் ஆக மாறுகிறது. வாசனை திரவியம், மருத்துவத்துறைக்கு இது அதிகளவு பயன்படுகிறது. தரமான ஒரு கிலோ ஏம்பர் கிரீஸ் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளது. வெளி நாடுகளுக்கு அதிகளவு கடத்தப்படுகிறது.
திமிங்கில எச்சம் என்கிற அம்பர்கிரிஸ் (Ambergris) எண்ணெய்த் திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். எண்ணைத் திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை இத் திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்கவைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும்.
இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர் கிரீஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர் கிரீசை சிலசமயம் எண்ணெய்த் திமிங்கிலங்கள் மூலம் வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றுகிறது. சில எண்ணெய்த் திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் இதை வெளியேற்றுகிறது.
எண்ணெய்த் திமிங்கிலம் தன் உடலிலின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றிய வாந்தி, கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் சேர்ந்து இந்த வாந்தியை அம்பெர்கிரிஸ் எனும் பொருளாக உருவாக்குகின்றன. அம்பர்கிரிஸ் எனும் வாந்தி நறுமணப் பொருள்களை தயாரிக்க பயனுள்ளதாக இருக்கிறது.
திமிங்கில வாந்தி எனும் அம்பெர்கிரிஸ் கருப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் எண்ணெய் நிறைந்த பொருள் ஆகும். இது நீள் வட்ட அல்லது வட்ட வடிவத்தில் காணப்படும். இது கடல்நீரில் தொடர்ந்து மிதந்து பயணம் செய்வதால் அத்தகைய வடிவம் ஏற்படுகிறது.
எண்ணெய்த் திமிங்கலத்தின் தலையில் ஸ்பெர்மாசிட்டி எனப்படும் ஒரு உறுப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது எண்ணெயால் நிரம்பியுள்ளது. இது திமிங்கிலத்தின் விந்து என்றும் நம்பப்பட்டது. எனவே இதற்கு விந்துத் திமிங்கிலம் எனப்பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இந்த உறுப்பு உண்மையில் ஒலி சமிக்ஞைகள் மற்றும் மிதப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.





















