மேலும் அறிய

Ramadoss vs Stalin: "வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்

"செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் இருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத்தடுத்து விட்டது." - ராமதாஸ்

முதல்வருக்கு வன்னியர் விரோத நெருப்பு

கடலூர்: தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோபத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். எதற்காக இந்த அறிக்கை வெளியிட்டார் என்பதை குறித்து பார்ப்போம்.

சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த செல்லதுரை தீபாவளிக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்த பொழுது தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக பத்திரிகை வைக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார். தனது தம்பியோடு பத்திரிகை வைத்துவிட்டு உடையூர் வழியாக தனது ஊருக்கு வந்து கொண்டிருந்த பொழுது ஆறு இளைஞர்கள் வழித்தடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் போக வேண்டும் எங்களுக்கு வழிவிடுங்கள் என்று செல்லதுரை கேட்ட நிலையில் வேண்டுமானால் வயலில் இறங்கி நடந்து போங்கள் என்று ஏளனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் வழி கேட்கவே அவர்கள் ஆறு பேரும் சேர்ந்து செல்லதுரையை மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

அடித்தவர்களில் ஒருவன் அலைபேசியில் செய்தி சொல்லி பத்துக்கும் மேற்பட்டவர்களை அழைத்து, அவர்களும் சேர்ந்து நின்று தாக்க பலத்த காயங்களோடு முகத்திலும் உடலிலும் ரத்தம் வழிய செல்லத்துரை மூர்ச்சையாகியிருக்கிறார். மேலும் அவரை தாக்கிய வீடியோவையும் வெளியிட்டனர். இதனால் அந்த பகுதியில் சாதி ரீதியான மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இளைஞர்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்த செல்லத்துரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை உடைத்ததை கண்டித்து புவனகிரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நிர்வாகி ஒருவர், வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழியின் தலையை வெட்டி எடுப்போம் என பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாமக நிறுவனரான ராமதாஸும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதனிடையே செல்லதுரை தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கொக்கரித்துள்ளனர். கடலூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் ஏதேனும் பகுதியில் ஆளும்கட்சிக்கு எதிராக எவரேனும் மேடை போட்டு பேசினால், அந்த கூட்டத்தின் ஒலி வாங்கியை அணைப்பது, மின்சாரத்தை துண்டிப்பது, கூட்ட ஏற்பாட்டாளர்களை கைது செய்வது உள்ளிட்ட அனைத்து சாகசங்களையும் செய்யும் காவல்துறை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொக்கரிப்புகள், வெறுப்புப் பேச்சுகள், கொலைமிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, கொலை மிரட்டல் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவரது அலுவலகத்தில் வைத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு நடத்தியுள்ளார். கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளை, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தால், அலுவலகத்திற்கு அழைத்து  உபசரிப்பது தான் திராவிட மாடல் காவல்துறையின் கொள்கையா?

மஞ்சக்கொல்லை செல்லத்துரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடூரமாக தாக்கி, ரத்தம் கொட்டும் நிலையில் அவர் சுய நினைவின்றி விழுந்து கிடப்பது, அவர் மீதும், அவரது  உடை மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கால்களை வைத்து வன்னியர் சமூகத்தை அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்றும், அடுத்த  42 ஆண்டுகளுக்கு வன்னியர்கள் எங்களிடம் அடிவாங்கித் தான் ஆக வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பேசுவது உள்ளிட்ட அனைத்துக்கும் காணொலி ஆதாரங்கள் உள்ளன.

இவ்வளவுக்குப் பிறகும் சம்பந்தபட்டவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு  கடலூர் மாவட்ட காவல்துறை தயங்குவது ஏன்? யாருடைய ஆணைக்காக காவல்துறை காத்திருக்கிறது? வன்னியர்களும், பட்டியலினத்தவரும் நட்புடன் வாழ வேண்டும், பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். இந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலான எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். இது எங்களின் நல்ல நோக்கமே தவிர பலவீனம் அல்ல. அதே நேரத்தில் கொட்டக் கொட்ட குனிந்து கொண்டிருக்கவும் மாட்டோம் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர வேண்டும்.

வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்;

செல்லத்துரையை கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும் என தெரிவித்தார்.

வன்னிய மக்கள் மீது இப்படி ஒரு வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது

கடலூர் மாவட்டத்தில் வன்னிய மக்கள் மீது இப்படி ஒரு வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல கோவையில் செந்தில் பாலாஜியின் ‘கம்பேக்’கை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது. கடலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், காவல்துறையினரின் செயல்பாடுகளையும் வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது களப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியாகவே தோன்றுகிறது.

அன்று தந்தை செய்ததை இன்று தனயன்

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் எதிர்கொள்வது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு எனது திண்டிவனம் வீட்டில் காவல்படைகளை குவித்து எனது வீட்டை சோதனை செய்ததாக செய்தி பரப்பியது, பு.தா. அருள்மொழி உள்ளிட்ட பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது, விழுப்புரத்தில் பாட்டாளி தொழிற்சங்கம் நடத்திய பேரணியில் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது, கடலூர் புதுச்சத்திரத்தில் இராஜேந்திரன் என்ற தொண்டரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது உள்ளிட்ட ஏராளமான அடக்குமுறைகளை 1989-ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கட்டவிழ்த்து விட்டார். அன்று தந்தை செய்ததை இன்று தனயன் செய்கிறார். அவ்வளவு தான்.

திமுக அரசின் அடக்குமுறை

திமுக அரசின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் முறியடிக்கும் திறனும், உறுதியும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அதேநேரத்தில் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர் வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?
கொளுத்திப் போட்ட டிரம்ப்
”சென்னைக்கு வாங்க வருண்”ஸ்டாலின் போடும் MASTERPLAN! டார்கெட் தவெக விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
Thailand Cambodia Dispute: மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
Embed widget