மேலும் அறிய

CPM balakrishnan vs DMK : திமுகவை எதிர்த்து பேசிய கே.பாலகிருஷ்ணன்! திடீர் மாற்றம்.. புதிய நிர்வாகி யார் தெரியுமா ?

திமுக வெளிச்சத்தில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று திமுக தலைமை சொல்வது பொறுத்தமல்ல - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று முன் தினம் (03-01-25) அன்று தொடங்கியது. 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் நாளின் போது மாநாடு மற்றும் செந்தொண்டர் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளில், மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் மூன்றாவது நாள், இன்று (05-01-25) புதிய நிர்வாகிகள் மற்றும் புதிய மாநிலக் குழு, மாநில செயற்குழு, புதிய மாநில செயலாளர் தேர்வு நடைபெற்றது.

இதையும் படிங்க: பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

தற்போதைய மாநில செயலாளராக உள்ள கே. பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு புதிய மாநிலச் செயலாளர் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் மூன்று முறை மாநில செயலாளர் பதவி வகிக்கலாம் என்ற விதி உள்ள நிலையில், பாலகிருஷ்ணன் இரு முறை மாநில செயலாளர் பதவி வகித்துள்ளார். எனினும் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.  இதில் புதிய மாநிலச் செயலாளராக, பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். 80 நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பெ.சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

மாநிலச்செயலர் ஆக தேர்வான பின் சண்முகம் பேசியதாவது:

மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபடுகிறது. வேலைவாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைகளில் தான் மத்திய அரசு ஈடுபடுகிறது. உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினார். 

இதையடுத்து, கே.பாலகிருஷ்ணன் கருத்துக்கு திமுகவின் நாளேடான முரசொலி விமர்சித்து கட்டுரை வெளியிட்டது குறித்து அவரிடம் கேள்விக்கு பதிலளித்த பெ.சண்முகம், “ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் இந்திய அரசியலமைப்பு சாசனம், இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படையான உரிமைகள். அந்த உரிமைகளை மறுப்பதற்கு எந்த அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது.

இதையும் படிங்க: வெறும் 50 லட்சம்..அலட்சியம் காட்டிய லைகா..ஆப்பு வைத்த ஹாலிவுட் நிறுவனம்

அன்றைக்கு எங்கள் கட்சியினுடைய மாநில மாநாட்டில் செந்தொண்டர் பேரணிக்கு கூட விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தான், அத்தகைய முறையில் எங்களுடைய கண்டனங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஒரு கட்சியினுடைய மாநில மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு என்பதை எக்காரணம் கொண்டும் எங்களால் ஏற்க முடியாது. அந்த வகையில், காவல்துறையின் அணுகுமுறைக்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இதை நிச்சயமாக திமுக தலைமை புரிந்துகொள்ளும் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

 திமுகவோடு பல நேரத்தில் உறவாக இருந்திருக்கிறோம்; பல நேரத்தில் எதிர்வரிசையில் இருந்திருக்கிறோம். அதனால், தி.மு.கவால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பதல்லாம் அதீதமான வார்த்தை. நிச்சயமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பலத்திற்கேற்ப சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதன் மூலமாக தான், தமிழகத்தில் எங்கள் கட்சி செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறது. எனவே, திமுக வெளிச்சத்தில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று திமுக தலைமை சொல்வது பொறுத்தமல்ல. அந்த மாதிரியான செய்தியை முரசொலி பத்திரிகையில் வெளியிட்டிருப்பது என்பது பொறுத்தமில்லாத ஒன்றாகும் என பேசினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Embed widget