கண்ணீர் நல்லதா, கெட்டதா?

Published by: ஜான்சி ராணி

பெண்களின் கண்ணீரை அவர்களுக்கு பாதகமாக மாற்றிதான் ஆண்கள் சமூகம் பேசுவதுண்டு. ஆனால் மருத் துவர்களும், உளவியல் வல் லுநர்களும் கண்ணீர்தான் பெண்களின் ஆகச்சிறந்த பலம் என்கிறார்கள்

'நிதர்சனம் என்னவென் றால் ஆண்களும் கண்ணீர் விட கற்றுக் கொள்ள வேண் டும்' அழுத்தமாக சொல்கிறார் நிபுணர்.

பெண்களுடைய உடல் உறுப்புகளே அப்படியான தகவமைப்புகளுடன் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் பால் சுரப்புக்கான அதே ஹார்மோன் தான் கண்ணீர் சுரப்பியிலும் வேலை செய்கிறது.

போலவே ஆண்களின் உடல் இயல்பாகவே கண் ணீரை கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோன் களை கொண் டிருக்கிறது. பெண்களில் கண்ணீரை வெளியேற்றும் சுரப்பிகளாக தகவமைப்பு கொண்டிருக்கும். மேலும் ஆண்களின் கண்ணீர் சுரப்பி முடிந்தவரை கண்ணீரை உள் இழுத்துக்கொள்ளும்.

ஏதோ ஒரு பெரிய பிரச்னை அல்லது உங்கள் வீட்டில் யாரோ ஒருவர் மரணம் ஓரிரு தினங்கள் உங்களால் முடிந்த அளவு அழுது விட்டு பிறகு யோசித் துப் பாருங்கள்

உங்கள் மனதில் ஒரு தெளிவு கிடைக்கும். மூளையை சூழ்ந்திருந்த ஏதோ ஒரு அழுத்தம் அல்லது ஒரு திரை விலகியது போல் இருக்கும்..

இனிவரும் காலங்களில் பெற்றோர்கள் பெண்களின் கண்ணீரை மதிக்க கற்றுக்கொள் என ஆண்களுக்கு வகுப்பு எடுப்பதுதான் சிறந்த தீர்வு.

அதே போல் எதுவானாலும் உன் மனதுக்குள் இருக்கும் குழப்பத்தை வெளியேற்ற மனம் விட்டு அழுவது மிகச்சிறந்த தீர்வு

மிருகங்கள் கூட பல நேரங் களில் தங்கள் உணர்வுகளை கண்ணீர் மூலம் தான் வெளிப்படுத்தும் அதில் மிகச்சிறந்த மிருகம் யானை. எப்படி சிரிப்பது மனித குணமோ அதேபோல் அழுவதும் மனித இயல்புதான்.