மேலும் அறிய

CM MK Stalin speech: திருவண்ணாமலை விசாரணை கைதி மரணம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி கடந்த 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணைக்காக திருவண்ணாமலை அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விசாரணை கைதி தங்கமணியின் இறப்பிற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதில், “மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு நீதித்துறையின் நடுவர் முன்னிலையில் உடற்கூர் ஆய்வு நடைபெற்றது. அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்பட்டு இந்த அவைக்கு தெரிவிக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவருக்கு தங்கள் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், இதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இந்த மரணம்  இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் அளிக்க  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவுகளை மூடியதுடன் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல  அனுமதி மறுத்தனர். இந்த சம்பவத்தால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதன் பின்னர் திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதியரசர் பாக்யராஜ் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றுது. நீதியரசர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றும் திருப்தி அடையாத தங்கமணியின் உறவினர்கள் தங்கமணியின் முகம் மற்றும் விரல் பகுதிகளில் ரத்தக்காயம் இருப்பதால் உடற்கூறு ஆய்வு அறிக்கை வரும் வரையில் உடலை வாங்க மறுத்து சென்றதால்  அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
CM MK Stalin: நெஞ்சை நிமிர்த்தி திராவிட மாடல் 2.0 ஆட்சியமைப்போம்.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
"திருமாவும் - சீமானும்’ போட்டுடைத்த ஹெச்.ராஜா - அப்படி என்ன சொன்னார்?
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
TASMAC: நாளை மறுநாள் மே 1! உழைப்பாளர் தினத்தில் டாஸ்மாக் திறந்திருக்குமா? மூடப்படுமா? முழு விவரம் இங்கே!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Group 2 Result 2025: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெல்டர் போக்சோவில் கைது
ரூ.50 லட்சம்; அரசு வேலை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த அரசு!
ரூ.50 லட்சம்; அரசு வேலை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த அரசு!
Loan Collection New Rules: வலுக்கட்டாயமா கடனை வசூலிச்சா 5 ஆண்டுகள் சிறை.. புதிய சட்டம் பத்தி தெரியுமா.?
வலுக்கட்டாயமா கடனை வசூலிச்சா 5 ஆண்டுகள் சிறை.. புதிய சட்டம் பத்தி தெரியுமா.?
Canada Election 2025: கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
கனடா தேர்தல்.. லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஜஸ்ட் மிஸ்.. நிலவரம் என்ன.?
Embed widget