தாய்மாமாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! நெகிழ்ச்சியான தருணம்! திமுக கொண்டாட்டம்
தாய்மாமாவின் 102 வது பிறந்த நாள்; தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தனது தாய்மாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தொலைப்பேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மைத்துனரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தாய் மாமா தெட்சிணாமூர்த்தி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்திருமாளம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது 102 பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டினார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக தாய்மாமா தெஷ்ணாமூர்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
அதனை தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர் செயலாளர் பூண்டி கலைவானன் ஏலக்காய் மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆசிபெற்று திமுக கொடி, உதயசூரியன் சின்னம் பதித்த கேக் வெட்டி 102 வயது பிறந்தநாளை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், கேப்டன் செல்வராஜ், தேவா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுத்து தலைமை செயற்குழு உறுப்பினர் கணபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமார், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





















