விவேக் பூரண குணமடைய வேண்டும்: முதல்வர், துணை முதல்வர் டுவிட்
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பிராத்தனை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி டுவிட் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த்திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்திப்பதாக கூறியுள்ளனர்.

நடிகர் திரு. விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன்.

அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 16, 2021

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் @Actor_Vivek அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) April 16, 2021

துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.