‛சிறப்பாக செயல்படும் ஸ்டாலின்...’ நிதி வழங்கிய பின் சீமான் பேட்டி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டினார்.
மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும். எனவே 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதை விட்டுவிட்டு மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நேரில் சந்தித்து தலா 5 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா மற்றும் சீமான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய சீமான், 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வரிடம் பேசி உள்ளோம், ஜனாதிபதி நல்ல முடிவெடுப்பார் என்று முதல்வர் தன்னிடம் கூறினார் என்றும், காங்கிரஸ் 7 பேர் விடுதலை தொடர்பாக எதிர்ப்பது பற்றி கண்டு கொள்ள வேண்டாம் எனவும் கூறினேன் என்றார்.
மேலும், மாணவர்களின் நலன் கருதி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும் பேசியிருக்கிறோம் நல்ல முடிவு எடுப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார் என தெரிவித்தார். ‘தி பேமிலி மேன் 2’ சீரியஸில் தமிழர்களை வேண்டுமென்றே அவமதிப்பதாக செய்துள்ளார்கள் என்றும்
முதல்வரை நேரில் சந்தித்தது மிகவும் பெருமையான ஒரு சந்திப்பாக இருந்ததாகவும் சீமான் கூறினார்.
மேலும், இந்த சந்திப்புக்கு வேறொரு காரணமும் உண்டு தன்னுடைய தந்தை இறந்ததற்கு ஒரு முதல்வராக அறிக்கை விட்டிருந்தார். அதோடு அவர் விட்டு இருக்கலாம். ஆனால் தனக்கு தொலைபேசியில் அழைத்து தனக்கு ஆறுதல் கூறியது மனதுக்கு இதமாக இருந்தது எனவும், 7 பேர் விடுதலையில் நாங்கள் எப்படி உறுதியாக இருக்கிறோமே அதேபோன்று முதல்வரும் உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.
உதயநிதியிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய சூரி!
பிளஸ் 2 தேர்வு மட்டுமன்றி மற்ற அனைத்து தேர்வுகளும் மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் சீமான் கூறினார்.
மேலும் சீமான் அளித்த பேட்டியில், “கொரோனா தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது. எல்லா துறைகளும் வேகமாக இயங்குகின்றன. குறிப்பாக மருத்துவத் துறையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட எல்லோரும் நன்றாக இயங்குகின்றனர். அவர்களை அழைத்துப் பேசி என் வாழ்த்துகளை கூறி வருகிறேன்” என்றும் கூறினார்.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சியின் சீமான் அதிமுகவை விட திமுகவையே அதிகம் விமர்சனம் செய்திருந்தார். தற்போது, அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதால் சீமான் இவ்வாறு கூறியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
வந்துட்டோம்னு சொல்லு... இங்கிலாந்தில் GETHU காட்டிய இந்திய அணி