வெளுத்துவாங்கிய அனல்காற்று... வெயிலால் வெலவெலத்துப் போன பொதுமக்கள்.. சென்னை நிலை தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று அதிகப்பட்சமாக சென்னை மீனம்பாகத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மிகவும் அதிகமாக வாட்டி வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்தக் காலத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இன்று சென்னையில் 104 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கிய நாட்கள் முதலே தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக சென்னையில் வெப்பம் சலனம் காரணமாக மழை பெய்தது. இதனால் பெரிதாக வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இருப்பினும், இரவு நேரங்களில் வெக்கை மற்றும் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில், கத்திரி வெயில் மீண்டும் அதன் தன்மையை காட்ட தொடங்கியது. தமிழ்நாட்டில் இன்று அதிகப்பட்சமாக சென்னை மீனம்பாகத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. கடலூர் 102.7, சென்னை நுங்கம்பாக்கம் 102.5, மதுரை விமானநிலையம் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
அதேபோல், பரங்கிபேட்டை 101.6, கரூர் பரமத்தி வேலூர் 101.3, திருத்தணி 101.4 மற்றும் புதுச்சேரியில் 100.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
மழைக்கு வாய்ப்பா..?
வெப்பச்சலனம் காரணமாக, 23.05.2023, 24.05.2022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேளானறு முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.05.2021, 26051022 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.03.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைக்கபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
23.01.2022: இலட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 2401.2022 தென்மேற்கு வங்கக்கடல் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதன் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வோத்திதும் வீசக்கூடும்.
எனவே, இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்