மேலும் அறிய

Rain Alert:தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

”1. குமரிக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது.
2. தென்கிழக்கு  வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது.

இதன் காரணமாக, 

19.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20.11.2023: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

19.11.2023 மற்றும் 20.11.2023:, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்திSenthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
MBBS BDS Application 2025: தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Piyush Chawla Retires: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா..! ஷாக்கில் ரசிகர்கள்!
Piyush Chawla Retires: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா..! ஷாக்கில் ரசிகர்கள்!
Tata EV Discounts: விட்டதை பிடிக்கணும், லட்சத்தில் விலையை குறைத்த டாடா - EV கார்களுக்கு கொட்டும் ஆஃபர்கள்
Tata EV Discounts: விட்டதை பிடிக்கணும், லட்சத்தில் விலையை குறைத்த டாடா - EV கார்களுக்கு கொட்டும் ஆஃபர்கள்
Embed widget