Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்கள்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”வடதமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக, 27.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
பூண்டி (திருவள்ளூர்) 9, பொன்னை அணை (வேலூர்) 7, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 6, சோழவரம் (திருவள்ளூர்), பணப்பாக்கம் (ராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), அம்மூர் (ராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), காஞ்சிபுரம், வளசரவாக்கம் (சென்னை), மணலி (சென்னை) தலா 5, கேவிகே காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), கிருஷ்ணகிரி, கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), DGP அலுவலகம் (சென்னை) தலா 4, குடியாத்தம் (வேலூர்), காட்பாடி (வேலூர்), வேலூர், அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மேலாளத்தூர் (வேலூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), CD மருத்துவமனை தொண்டைப்பேட்டை (சென்னை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), மதுரவாயல் (சென்னை), T.V.K .நகர் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மாதவரம் (சென்னை), அண்ணாநகர் (சென்னை), கிருஷ்ணகிரி. தலா 3, பாலார் அணைக்கட்டு (ராணிப்பேட்டை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), அம்முண்டி (வேலூர்), TCS மில் கெத்தண்டப்பட்டி (திருப்பத்தூர்), பூண்டி (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ராணிப்பேட்டை, மின்னல் (ராணிப்பேட்டை), ஆற்காடு (ராணிப்பேட்டை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), ஆரணி (திருவண்ணாமலை), சென்னை நுங்கம்பாக்கம், பூந்தமல்லி (திருவள்ளூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), எம்ஜிஆர் நகர் (சென்னை), திருவள்ளூர், தருமபுரி PTO, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), KRP அணை (கிருஷ்ணகிரி), ராயபுரம் (சென்னை), அடையாறு (சென்னை), திருவொற்றியூர் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), ஐஸ் ஹவுஸ் (சென்னை), VIT AWS சென்னை, VCS மில் அம்முடி (வேலூர்), YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 2, ஆம்பூர் (திருப்பத்தூர்), NIOT ARG பள்ளிக்கரணை (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), வானகரம் (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), பொன்னேரி (திருவள்ளூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), செங்கம் (திருவண்ணாமலை), புகையிலை நிலையம், வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை” இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.