மேலும் அறிய

Rain Alert : தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ... எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், ராமநாதபுரம்,சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,   

13.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

14.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

15.08.2023 முதல் 19.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

சாத்தூர் (விருதுநகர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) தலா 7, செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), லால்குடி (திருச்சி) தலா 6, திருப்போரூர் (செங்கல்பட்டு), செய்யாறு (திருவண்ணாமலை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மரக்காணம் (விழுப்புரம்), முத்துப்பேட்டை (திருவாரூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), அரிமளம் (புதுக்கோட்டை), போளூர் (திருவண்ணாமலை) தலா 5, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), தொழுதூர் (கடலூர்), ராணிப்பேட்டை, அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) தலா 4, பெரம்பலூர், லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), புதுக்கோட்டை, மணம்பூண்டி (விழுப்புரம்), நன்னிலம் (திருவாரூர்), மதுரை விமான நிலையம், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), எட்டயபுரம் (தூத்துக்குடி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), எறையூர் (பெரம்பலூர்), மலையூர் (புதுக்கோட்டை), எம்ஜிஆர் நகர் (சென்னை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), பாலவிதிதி (கரூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), நாகப்பட்டினம்  தலா 3, 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

Ashok Kumar Arrest: சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதர் கைது? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அமலாக்கத்துறை

Independence Day: 1,800 சிறப்பு விருந்தினர்கள்..செல்பி எடுக்க ஸ்பெஷல் ஸ்பாட்..சுதந்திர தினத்திற்காக மத்திய அரசின் மெகா பிளான்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget