மேலும் அறிய

Rain Alert :தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,   

09.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

10.08.2023 மற்றும் 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.08.2023 முதல் 15.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை : 

09.08.2023 மற்றும் 10.08.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 

09.08.2023 மற்றும் 10.08.2023: `தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க,

Kanimozhi M.P: பாண்டியனின் செங்கோல் எரிந்தது இப்படித்தான்... எங்க வரலாறு தெரியுமா? - பிரதமருக்கு கேள்வி எழுப்பிய கனிமொழி

Actor Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற நிகழ்ச்சி; கல்லூரி வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த பாஜக மாணவர்கள் அமைப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
Bhogi 2025 Wishes: எரிவது சோகங்களாகவும், ஜொலிப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.. போகிப்பண்டிகை வாழ்த்துகள்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Bhogi Festival History: நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
நன்மைகளே சூழ வேண்டுதல்; போகிப் பண்டியின் சிறப்பும் வரலாறும்..
Embed widget