Kanimozhi M.P: பாண்டியனின் செங்கோல் எரிந்தது இப்படித்தான்... எங்க வரலாறு தெரியுமா? - பிரதமருக்கு கேள்வி எழுப்பிய கனிமொழி
மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசு மக்களைக் கொள்ளும் அரசாக மாறிவிட்டது என, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கனிமொழி எம். பி பேசியுள்ளார்.
மணிப்பூரில் இரட்டை என்ஜின் அரசு மக்களைக் கொள்ளும் அரசாக மாறிவிட்டது என, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கனிமொழி எம். பி பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், மணிப்பூரில் படுகொலைகளைத் தடுக்க மாநில அரசும் மத்திய அரசும் தவறிவிட்டன. மணிப்பூரில் உணவு, தண்ணீர் என அடிப்படை தேவைகள் கூட மக்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்துள்ளீர்கள். மதுரையில் பாண்டிய மன்னனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? கண்ணகி மதுரையை எரித்த கதை தெரியுமா உங்களுக்கு? எங்களை ஹிந்தி படிக்கச் சொல்வதைவிட நீங்கள் சிலப்பதிகாரம் படியுங்கள் அதில் உங்களுக்கான பாடம் உள்ளது என அவேசமாக பேசினார்.
மேற்கொண்டு பேசிய அவர், மணிப்பூர் மகளிர் ஆணையமும் தேசிய மகளிர் ஆணையமும் வேடிக்கை பார்ப்பவையாகத்தான் உள்ளது. 3 மாதங்களாக மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை தடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார். நாட்டில் ஏராளமானோர் வேலை இல்லாமல் உள்ள நிலையில் மத்திய அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. குறிப்பாக ரயில்வே துறையில் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளது. நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழ மன்னனுடையது என்றீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா உங்களுக்கு? எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது. தமிழ்நாட்டின் வரலாறு பற்றி பிரதமர் மோடிக்கு தெரியுமா? மணிப்பூர் மக்களை பிரதமஎ நேரில் சந்தித்து நீதியை நிலைநாட்டவேண்டியது அவசியம் என பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட பின்னரும் மத்திய அரசு அமைதி காக்கிறது. அடைக்கலம் கோரிய பெண்களுக்கு மணிப்பூர் காவல்துறை பாதுகாப்பு தராமல் வன்முறை கும்பலிடம் விட்டுவிட்டு போயுள்ளது. மகாபாரத திரெளபதியை போல மணிப்பூரிலும் பெண்கள் ஆடைகள் கலையப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டும் யாரும் உதவவில்லை. மணிப்பூர் அகதி முகாம்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மிகவும் மோசமாக உள்ளன. குக்கி,நாகா மக்கள் மீது மணிப்பூர் முதலமைச்சர் குற்றம் சாட்டுகிறார். முன்னாள் அதிகாரிகள் மணிப்பூர் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டுகின்றனர் என பேசியுள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் மக்களவை குழு துணை தலைவர் கவுரவ் கோகோய், பிரதமர் மோடி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இதை தொடர்ந்து, பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், அதற்கு பாஜக அமைச்சர்களும் பதில் அளித்து பேசினர். இந்த சூழலில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் இரண்டாவது நாளான இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, "ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்ததாகவும் இந்தியாவில் அரசின் அகங்காரத்தால் ஹரியானா மற்றும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருப்பதாக" ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.