Fire Accident: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் பலி, இருவர் படுகாயம்! ஆத்தூரில் சோகம்!
எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு குடோனில் இருந்த பட்டாசு முற்றிலும் வெடித்து கட்டிடம் தரைமட்டமானது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள கடம்பூர் மேற்கு காடு பகுதியில் வசிப்பவர் தனசேகரன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரது சொந்தமான விவசாய தோட்டத்தில் மணி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் சிறிய கட்டடங்கள் நான்கு கட்டி பட்டாசு செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது பட்டாசு ஆலையில் உள்ள மூலப் பொருட்களை எடுப்பதற்காக கூலமேடு கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் ஒரு கட்டிடத்திற்குள் சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு குடோனில் இருந்த பட்டாசு முற்றிலும் வெடித்து கட்டிடம் தரைமட்டமானது. இதில் ராஜமாணிக்கம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பணியில் ஈடுபட்டிருந்த சத்தியா, விஜயா ஆகிய இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த தகவல் இருந்து வந்த ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் மற்றும் கெங்கவள்ளி காவல்துறையினர் இறந்த ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வழிமறிக்க ராஜமாணிக்கத்தின் உறவினர்கள் தங்களுக்கு தெரியாமல் எப்படி ராஜமாணிக்கத்தின் உடலை பார்க்காம் எடுத்து சென்றதாக கூறி, ஆத்தூர் - கடம்பூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

