Rain Update : இனிமே மழை இப்படி இருக்குமா? வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!
வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 7-ந் தேதி ( நாளை மறுநாள்) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், வரும் 8-ஆம் தேதிக்கு பிறகே தமிழ்நாட்டில் மழை படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பாகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கரூர்: மாயனூர் கதவணையில் இருந்து ஒரு லட்சத்து 71 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், காவிரி கரையோர பகுதிகளில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி கரையோரங்களில் தண்ணீர் அதிகளவில் பாய்ந்து வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஈரோட்டிலும் பவானிசாகர் அணை நிரம்பி வழிவதால் உபரிநீர் தொடர்ந்த வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, பவானிசாகர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மழையில் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்றும், நீர் நிரம்பியுள்ள இடங்களில் செல்பி மோகத்தால் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : College Admission: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரலாம்; சிறப்புப் பிரிவினருக்கு இன்று தொடங்கிய கலந்தாய்வு..
மேலும் படிக்க : Crime: அரை நிர்வாணத்துடன் கொள்ளையடிக்க வந்த கும்பல்....சென்னையில் பரபரப்பு...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்