Chennai High Court: வீடியோ விசாரணையில் சென்னை வக்கீலின் பாலியல் செயல்பாடு.. கடுப்பான நீதிபதிகள்.. விதிக்கப்பட்ட தடை
நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் அல்லது தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞராக பணிபுரிய தடை விதித்து பார் கவுன்சில் நேற்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி முறையில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, வழக்கறிஞர் ஒருவர் பாலியல் நடவடிக்கைகளை ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின்போது நேரலையில் அநாகரிகமாக நடந்துகொண்ட வழக்கறிஞர் விவகாரம் - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்
சமூக வலைதளங்களில் அந்த வீடியோ பரவுவதை தடுக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவு#chennaihighcourt— ABP Nadu (@abpnadu) December 22, 2021
கொரோனா பெருந்தொற்று காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் காணொலி காட்சி வாயிலாக வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, வழக்கறிஞர் ஒருவர் அருகில் நின்றிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டதால் வலைதளங்களில் வெளியாகின. இதனைக் கண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

நீதிமன்றத்தின் மாண்பை அழிக்கும் இச்செயலுக்கு நீதிபதிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து விரிவான விசாரணை நடத்தி டிசம்பர் 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
தவறு செய்த வழக்கறிஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் அல்லது தீர்ப்பாயங்களிலும் சந்தான கிருஷ்ணன் வழக்கறிஞராக பணிபுரிய தடை விதித்து பார் கவுன்சில் நேற்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
நீதிமன்ற விசாரணையின்போது, குறைந்தபட்ச ஒழுக்கத்தை கடைப்பிடித்து கவனமுடன் செயல்பட வேண்டும். ஆனால், இந்த வழக்கறிஞரின் நடவடிக்கையில் எந்தவிதமான நியாயத்தையும் நம்மால் காணமுடியாது என்று பார் கவுன்சில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Anti lynching bill: கும்பல் வன்முறைக்கு எதிரான சட்ட மசோதாவை நிறைவேற்றியது ஜார்க்கண்ட் அரசு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

