தமிழ்நாட்டில் நாளைமுதல் தளர்வுகள் இல்லா ஊரடங்கு : வங்கிகள் இயங்குமா?

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துவரும் சூழல் தான் நிலவுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 35873 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 448 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் வரும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு என்ற முடிவை அரசு அறிவித்துள்ளது. 

இந்தப் புதிய அறிவிப்பின்படி அத்தியாவசிய தேவைகளான பால் மற்றும் மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் ஒரு வாரத்திற்கு இயங்காது. காய்கறிகள் தள்ளு வண்டிகளில் தெருக்களில் மாநகராட்சி சார்பில் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் முழு லாக்டவுனில் வங்கிகள் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் நாளைமுதல் தளர்வுகள் இல்லா ஊரடங்கு : வங்கிகள் இயங்குமா?

புதிய ஊரடங்கு அறிவிப்பின் படி ஏடிஎம் வசதிகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிகள் 33% பணியாளர்களுடன் அடுத்த ஒரு வாரத்திற்கு இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வங்கிக்கு சென்று பணியாற்றலாம் என கூறப்பட்டுள்ளது. அதனால் வங்கிகளில் மிக முக்கிய பணிகள் கண்டிப்பாக நடைபெறும் என தெளிவாகியுள்ளது. இவை தவிர எரிவாயு சிலிண்டர் டெலிவரி, அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், பத்திரிகை, தொலைதொடர்பு சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மருத்துவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் இன்னும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து கட்சி எம்.எல்.ஏ குழுவின் கூட்டத்திலும் ஊரடங்கை தளர்வுகள் இன்றி செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வரும் திங்கள் முதல் ஒருவார காலத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags: COVID-19 Corona Virus Tamilnadu lockdown SBI Banks IOB CUB IDBI function open

தொடர்புடைய செய்திகள்

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

Tamil Nadu Coronavirus LIVE News : கொரோனா இறப்பு நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல் - உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Tamil Nadu Coronavirus LIVE News : கொரோனா இறப்பு நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல் - உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

‛செக்ஸ் டார்ச்சர்’ டாக்டர் மதுரைக்கு பணியிட மாற்றம்

‛செக்ஸ் டார்ச்சர்’ டாக்டர் மதுரைக்கு பணியிட மாற்றம்

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !

டாப் நியூஸ்

Ring Of Fire Images | சூரியனே.. சூரியனே.. உலகின் பல்வேறு இடங்களில் சூரிய கிரகணம் - புகைப்படங்கள்!

Ring Of Fire Images | சூரியனே.. சூரியனே.. உலகின் பல்வேறு இடங்களில்  சூரிய கிரகணம் - புகைப்படங்கள்!

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

‛விஷாலுக்கு எதிர்கால பயம்’ புகாருக்கு பதிலடி தந்த ஆர்.பி.செளத்ரி

‛விஷாலுக்கு எதிர்கால பயம்’ புகாருக்கு பதிலடி தந்த ஆர்.பி.செளத்ரி

‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!