பண்டாரத்தி பாடல் வரி நீக்கம்: கர்ணன் வழக்கு முடித்து வைப்பு
கர்ணன் படத்தில் பாடல் வரிகள் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட இரு வழக்குகளை , வரிகள் நீக்கப்பட்டதால் வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான சர்சைகளும் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. கர்ணன் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியான நிலையில் பண்டாரத்தி என்ற பாடல் வெளியான அன்றே விமர்சனத்தை பெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாக கூறி, ராஜா, பிரபு ஆகியோர் தனித்தனியே இரு வழக்குகள் தொடர்ந்தனர்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், அது தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் கோரப்பட்டது. படத்திலிருந்து சம்மந்தப்பட்ட வரிகள் நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று நீதிமன்றம் இரு மனுக்களையும் முடித்து வைத்து உத்தரவிட்டது.





















