அதிசார குரு பெயர்ச்சி 2025 - தனுசு ராசி
எட்டில் மறைவது குருபகவான் மட்டுமல்ல அவர் உங்கள் ராசிக்கு அதிபதியும் கூட

அதிசாரம் என்றால் முன்னோக்கி (or) மிக வேகமாக நகர்வது என்று பொருள்... குறிப்பாக கிரகங்களுக்கு மூன்று விதமான பயணங்கள் உண்டு அது பூமியிலிருந்து நம் பார்க்கும் பார்வையை பொறுத்தது... கிரகங்கள் சீரான வேகத்தில் அவரது நேர்கோட்டில் நகர்ந்து கொண்டு இருப்பார்கள்... பூமியிலிருந்து ஒரு கிரகம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் தற்பொழுது நான் கிரகங்களின் நகர்வை பற்றி சிறிதாக சொல்கிறேன்...
குரு தற்பொழுது மிதுன ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... அது சீரான பயணம்... ஆனால் அந்த குருவே சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் பொழுது பின்னோக்கி பயணிப்பது போல் தெரியும்...அதை நாம் ’வக்கிரம்’ என்று கூறுகிறோம்... இதே போல தான் குரு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து... மிதுன ராசியில் தென்படும் குருபகவான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்வது போல தெரியப்போகிறது... உண்மையிலேயே அவர் கடக ராசியில் தான் பிரவேசிக்கப் போகிறார்... இப்படி உச்சம் என்ற நிலைக்கு குருபகவான் போகும்பொழுது உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்ற உண்மையான விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...
அதிசார குரு பெயர்ச்சி 2025 தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே குருவானவர் தற்பொழுது ஏழாம் வீட்டில் அமர்ந்து சுபிட்சமான பல நல்ல காரியங்களை உங்களுக்கு கொண்டு வந்திருப்பார்... அதாவது செலவே ஆனாலும் கூட சுபச் செலவுகளாக இருக்க வாய்ப்புண்டு... தனுசு ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு சந்திரனை பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஒருவேளை உங்கள் ஜாதகத்தில் நான்காம் அதிபதியின் திசையோ புத்தியோ அந்தரமோ நடைபெற்றால் நிச்சயமாக நீங்கள் கார் வாங்க வாய்ப்பு அதிகம்... அல்லது நீண்ட தூர பிரயாணங்களை மனதிற்கு பிடித்தவர்களோடு பயணிக்க ஏற்ற நேரம்... சரி இதெல்லாம் மிதுன ராசியில் குரு இருக்கும்போது நடைபெறும் சமய சந்தர்ப்பங்கள்... ஆனால் குரு அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்தில் வருகிறாரே என்ன செய்ய காத்திருக்கிறார் என்று பயப்படத் தேவையில்லை...
எட்டில் மறைவது குருபகவான் மட்டுமல்ல அவர் உங்கள் ராசிக்கு அதிபதியும் கூட... அதாவது மற்ற ராசியினருக்கு குருபகவான் வேறு ஒரு பாவத்தோடு தொடர்புடையவர் ஆனால் தனுசு ராசி மற்றும் மீன ராசியை பொறுத்தவரை ராசி அதிபதியே குரு என்பதால் அவர் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் அறிவை கொடுப்பாரே தவிர மற்றபடி உங்களை கீழே இறக்க விட மாட்டார்... நீங்கள் மறைந்திருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தாலும் சரி அல்லது தற்போது வெளிநாடு போக வேண்டும் என்று நினைத்திருந்தாலும் சரி நிச்சயமாக அஷ்டமஸ்தானத்தின் மூலம் உங்களுக்கு உயர்வை கொடுத்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திச் செல்லுவார் அது மட்டுமல்லாமல் நீங்கள் ஆசைப்பட்டபடி என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே ஏற்படுத்தி தருவார்...
குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீடு மற்றும் நான்காம் வீட்டின் மேல் விழுவதால் நிச்சயமாக ஏற்கனவே வண்டி வாகனம் வீடு போன்றவை கிடைத்திருந்தாலும் சரி அல்லது இல்லாமல் போனாலும் சரி தற்பொழுது குரு பெயர்ச்சி மூலமாக நல்ல வாகன அமைப்பு நல்ல வீடு அமைப்பு நல்ல தாயாரின் உடல்நிலை சீராகுதல் போன்ற நல்ல அமைப்புகள் ஏற்படப்போகிறது....
அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் குரு உங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ நகர்த்தி செல்லுவார் அப்படி செல்லும் பட்சத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். நீங்கள் இருக்கின்ற இடத்தை விட தற்பொழுது குரு பெயர்ச்சிக்கு பின்பாக செல்லும் இடத்தில் சிறப்போடு இருப்பீர்கள்... வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள் மற்றும் ஓம் ஸ்ரீ குருவே நமஹ என்ற மந்திரத்தை உச்சரித்து வாருங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை பெறப் போகிறீர்கள்....






















