மீன் பிரியர்களுக்கு இனி சோகம்தான்! விண்ணை முட்டப்போகும் விலை!! இதெல்லாம்தான் காரணம்!!
இந்தக் காலத்தில் 13 கடலோர மாவட்டத்தில் உள்ள 6000 மோட்டர் படகுகள், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் வரை தேதி வரை, 60 நாள்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது.
கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் (Tamil Nadu Marine Fishing Regulation Act)1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு, மீன்பிடி தடைக்காலம் 2001 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படுகிறது.
இந்த காலத்தில் பாரம்பரிய மீன்பிடி படகுகள் தவிர விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் படகு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருவதால் மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை முதல் மீன் வரத்து குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவாதால், மீன்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்தக் காலத்தில் 13 கடலோர மாவட்டத்தில் உள்ள 6000 மோட்டர் படகுகள், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். திருவள்ளூர் முதல் கன்னியாக்குமரி மாவட்டம் வரை உள்ள கடலோர பகுதிகளில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு ஜீன் மாதம் 14 ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும். மேலும், 1.75 லட்சம் மீனவர்களுக்கு ரூ.5000 தொகை மீன்பிடி தடைகாலத்தில் உதவி தொகையாக வழங்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை காசிமேடு பகுதியில், மீன் விலை கிலோ ரூபாயில் வஞ்சிரம் 1000, பாறை 300, இறால் 400. சங்கரா 450, வவ்வால் 900, நெத்திலி 400, என்ற முறையில் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, மீன்பிடி தடை காலம் முடியும் வரை மீன்களின் விலை குறைய வாய்ப்பில்லை. மேலும், டீசல் விலையும் உயர்வும் மீன்களின் விலையில் எதிரோலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Ambedkar: அம்பேத்கரும் பெண் சமத்துவமும்.. சாதிய பாகுபாடுகளை அடிக்கோடிட்டு காட்டிய மாபெரும் ஆளுமை !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்