மேலும் அறிய

Jayakumar Condemns DMK: எம்.ஜி.ஆர் பற்றி தவறான கருத்தை திமுக கூறுகிறது : ஜெயக்குமார் கண்டனம்!

எம்.ஜி.ஆர் பற்றி தவறான கருத்துகளை திமுக அரசு கூறியிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரசியல் வரலாறு தெரியாத ஒருவர் முதலமைச்சராக இருப்பது தமிழ்நாட்டின் தலையெழுத்து என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி உண்மைக்கு மாறான பல தகவல்கள் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 16 ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், சென்னை கிண்டியில் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதோடு, அன்னாரின் திருவுருவச்சிலையினையும் 1998ஆம் ஆண்டு திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார். முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், அன்னாரின் 105-வது பிறந்த நாளானது (ஜனவரி17) தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக மருத்துவ வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது 1986-87 காலக்கட்டத்தில், தமிழகத்தில் மருத்துவத்துறைக்கென்று தனியாக பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க புரட்சித் தலைவைரின் அரசு முடிவெடுக்கப்பட்டு, 1987, டிசம்பர் 25ல் பல்கலைக்கழக திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

அப்பொழுது, மருத்துவ பல்சுலைக்கழகத்திற்கு "டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்” என்று பெயர் வைக்க அமைச்சர்கள் முடிவு செய்து, அன்றைய முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் கருத்து கூறினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார். அதன்பிறகு, திரு. முத்துசாமி அவர்களும், மற்ற அமைச்சர்களும், புரட்சித் தலைவரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்கள்.

Jayakumar Condemns DMK: எம்.ஜி.ஆர் பற்றி தவறான கருத்தை திமுக கூறுகிறது : ஜெயக்குமார் கண்டனம்!

திறப்பு விழாவிற்கு முதல் நாளான டிசம்பர் 24-ஆம் நாள் புரட்சித் தலைவர் அவர்கள் நம்மை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். அதன்பின், 1989-ல் சந்தர்ப்பவசத்தால் ஆட்சிக்கு வந்த திரு. கருணாநிதி வேறு வழியின்றி, தமிழ் நாடு என்று ஒரு வார்த்தையைச் சேர்த்து "தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம்" என்று அதே குடியரசுத் தலைவரை வைத்து திறப்பு விழா நடத்தினார். இது தான் உண்மை.

இதனால், தன் கட்சி வரலாறும், தமிழக அரசியல் வரலாறும் தெரியாத ஒருவரை முதலமைச்சராகப் பெற்றிருப்பது தமிழகத்தின் தலையெழுத்து என்றே கருதுகிறேன். தன்னை. திமுக-வின் தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆக்கிய கட்சியின் பொருளாளரான புரட்சித் தலைவரையே, கணக்கு கேட்டார் என்பதற்காக கட்சியை விட்டே நீக்கி, ஏறிய ஏணியை எட்டி உதைத்த, செய் நன்றி கொன்ற முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியின் வாரிசுகள் பொய்யையும், புனைச் கருட்டையும் மூலதனமாக்கி அரசியல் நடத்துவது விந்தையானதல்ல.

விடியா திமுக அரசின் செய்திக் குறிப்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி வாயிலாக தனக்கென்று தனியிடம் பெற்றவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் சினிமாவில் நுழையவே முடியாத நிலையில், திரைத் துறையே வேண்டாம் என்று கோவையில் இருந்து தனது சொந்த ஊரான திருக்குவளைக்கு ஓடியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பது வரலாறு. இதை அறிந்த புரட்சித் தலைவர், தனது தமையனார் பெரியவர் அமரர் திரு. எம்.ஜி. சக்ரபாணி அவர்களை விட்டு கருணாநிதி அவர்களுக்கு கடிதம் எழுதி,

அவரை மீண்டும் கோவைக்கு வரவழைத்து, பட்சிராஜா ஸ்டுடியோவில் மருதநாட்டு இளவரசி படத்திற்கு வசனம் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

Jayakumar Condemns DMK: எம்.ஜி.ஆர் பற்றி தவறான கருத்தை திமுக கூறுகிறது : ஜெயக்குமார் கண்டனம்!

மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள் வருவதற்கு முன்னரே, என்தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்சியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அனைத்திற்கும் மேலாக, திரு. கருணாநிதி எழுதியதாக சொல்லப்படும் வசனங்களை, எங்களது புரட்சித் தலைவரும், அவரது தம்பி நடிகர் திலகமும், தங்களுடைய படங்களில் உச்சரித்ததால் தான் திரு. கருணாநிதி அவர்களுடைய எழுத்துகளுக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு,

திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் தெரிந்த இந்த உண்மைகள், புரட்சித் தலைவரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய இன்றைய முதலமைச்சரின் உறவினர் திரு. சொர்ணம் அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர் இன்று நம்மிடம் இல்லை என்பதுதாள் இயற்கையின் சதி. இந்த உண்மைகளை மறைத்து வரலாற்றை திருத்தி எழுதிய கோமான்களை என்னவென்று சொல்வது? என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget