மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கம்... உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தம்பதி எடுத்த விபரீத முடிவு!
உடல்கள் பிரிந்து விடாமல் இறுக்க தங்களை பிணைத்துக் கட்டியபடி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இருவரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மரைன் காவல் துறையினர் இருவரது உடலையும் நேற்று கைப்பற்றினர்.
கோவை மாவட்டம், சமந்தூர், எஸ் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - தனலட்சுமி தம்பதி.
இவர்கள் இருவரது மகன் தன் 23ஆம் வயதில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இருவரும் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
உடல்களை கட்டி தற்கொலை
இந்நிலையில், நேற்று (ஜூன்.06) ராமேஸ்வரம் கடலில் குதித்து இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தங்கள் இருவரது உடலும் பிரிந்து விடாமல் இறுக்க பிணைத்துக் கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இருவரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ராமேஸ்வரம் மரைன் காவல் துறையினர் இருவரது உடலையும் நேற்று கைப்பற்றினர்.
மகன் தற்கொலை
தொடர்ந்து இவர்களது உடமைகளை சோதனையிட்டபோது, ஆதார் அட்டைகள், செல்போன்கள் கிடைத்ததில் இவர்களது அடையாளங்களை காவல் துறையினர் உறுதி செய்தனர்.
மேலும் படிக்க: 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை.. தாய் உட்பட 4 பேர் கைது.. மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை
தற்கொலைக்கு முன் உறவினர்களிடம் கோரிக்கை
மேலும், இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தங்களது உறவினர்களுக்கு அனுப்பிய தகவலில், ”மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் நாங்கள் ராமேஸ்வரம் கடலில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம். எனது சொத்துக்களை விற்று மகன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி மக்களுக்கு நல்லது செய்யுங்கள். அதற்கான ஆவணங்கள் வீட்டில் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காவல் துறையினர் அவர்களது உறவினர்களைத் தொடர்பு கொண்டு மேற்கொண்ட விசாரணையில், கோவிந்தராஜ் பொள்ளாச்சியில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், தனலட்சுமி காதி கிராஃப்டில் ஊழியராகப் பணியாற்றியதும் தெரியவந்தது. இந்நிலையில் இவர்களது உடல்களை உடற்கூராய்வுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் படிக்க: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமீன் வழங்க முடியாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்