’ரைசா வில்சன் பணம்பறிக்க முயற்சி செய்கிறார்’ - தோல் மருத்துவர் பைரவி செந்தில் குற்றச்சாட்டு..

நடிகை ரைசா தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதற்காகவே தன் மீது குற்றம்சாட்டியுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த தோல் நிபுணர் மருத்துவர் பைரவி செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

மாடலாக இருந்து தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வருபவர் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர், ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், தனுசு ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார். தற்போது காதலிக்க நேரமில்லை, எப்.ஐ.ஆர். உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.’ரைசா வில்சன் பணம்பறிக்க முயற்சி செய்கிறார்’ - தோல் மருத்துவர் பைரவி செந்தில் குற்றச்சாட்டு..

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவர் வலதுபுற கண்ணின் கீழே முகம்வீங்கிய நிலையில் காணப்பட்டிருந்தார். மேலும், அந்த படத்திற்கு கீழே தனது முகம் இப்படி வீங்கிய காரணத்தையும் கூறியிருந்தார்.

அதில், தோல் மருத்துவர் பைரவி செந்திலிடம் எளியமுறையில் ஃபேஷியல் செய்ய சென்றிருந்தாகவும், ஆனால், அவர் தன்னை கட்டாயப்படுத்தி தனக்கு விருப்பமில்லாத அழகுக்கலை முறைகளை செய்ததாலேயே தனது முகம் வீங்கியதாக பதிவிட்டிருந்தார். மேலும், தனது முகம் வீங்கியதைத் தொடர்ந்து அந்த தோல் மருத்துவர் தன்னை சந்திக்கவோ, தன்னுடன் பேசவோ மறுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ரைசாவின் வீங்கிய முகத்தை கண்டு சமூக வலைதளங்களில் பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த தோல் மருத்துவரையும் கடுமையாக விமர்சித்தனர்.’ரைசா வில்சன் பணம்பறிக்க முயற்சி செய்கிறார்’ - தோல் மருத்துவர் பைரவி செந்தில் குற்றச்சாட்டு..

இந்நிலையில், ரைசா குற்றம் சாட்டிய மருத்துவர் பைரவி செந்தில் ரைசா குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “இருபக்கமும் சீரான அளவில் இல்லாத முகத்தின் அமைப்பை, சீர் செய்யும் டெர்மல் ஃபில்லர்ஸ் சிகிச்சை முறையே நடிகை ரைசாவிற்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை ஏற்கனவே ஒரு முறை ரைசா எடுத்துக்கொண்டார். இதனால்தான் தற்போதும் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் ஒருவாரத்திற்கு முகம் வீக்கமாகவே இருக்கும். ஆனால், ரைசா முகம் வீங்கியதை காரணம் காட்டி என்னிடம் பணம் பறிக்க முயற்சிக்கிறார்” என்று கூறியுள்ளார்.

நடிகை ரைசா பணம் பறிப்பதற்காகத்தான் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் என்று மருத்துவர் பைரவி கூறியிருப்பது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ரைசா குற்றம்சாட்டியுள்ள மருத்துவர் பைரவி செந்தில், 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளார். எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. டெர்மடாலாஜி முடித்துள்ள பைரவி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பல்வேறு தோல் மற்றும் அழகுக்கலை அறிவுரைகளை வழங்கி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 45 ஆயிரம் நபர்கள் பின்தொடர்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் நடிகைகள் பலரும் தங்களது முக அமைப்பு மற்றும் உடல் அமைப்புக்கான சிகிச்சையை இவரிடம் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: tamil cinema actress raisa kollywood bigboss dermatologist

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

திருவண்ணாமலை : குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

திருவண்ணாமலை :  குறைந்து வருகிறது கொரோனா தொற்று : தடுப்பூசி நிலவரம் என்ன?

டாப் நியூஸ்

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!