நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை: நலம் விசாரித்த நடிகர் உதயா தகவல்
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் 48 மணி மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் நடிகர் உதயா தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக். ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து விவேக் நடித்துள்ளார். சமீபகாலமாக குறைந்த அளவிலான திரைப்படங்களிலே நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்ற விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, நடிகர் விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை பற்றி நடிகர் உதயா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட தகவலில், நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது சீரான உடல்நிலையுடன் இருக்கும் விவேக்கை, மருத்துவர்கள் 48 மணி நேர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகை குஷ்பு, கவிஞர் வைரமுத்து உள்பட பல பிரபலங்களும் பிரார்த்திப்பாக கூறியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

