’நீங்கள் பாதிக்கப்படுவது உங்கள் பிழையல்ல!’ -கொரோனாவிலிருந்து மீண்ட ஆண்ட்ரியா தரும் 10 அட்வைஸ்!

இந்த நோயால் ஏராளமான இளைஞர்கள் இறப்பதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.அதுதான் வைரஸிடமிருந்து காப்பாற்றுகிறது.வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். பத்திரமாக இருங்கள்.மிக முக்கியமாக கருணையோடு இருங்கள்.

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நடிகை ஆண்ட்ரியா தன்னைபோன்ற பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்து அறிவுரைகளைப் பகிர்ந்துள்ளார்.


’எனக்குக் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டு இன்றோடு 14 நாள். இதை நினைவுகூறும் வகையில்  என்னைப் போன்று கொரோனா பாதிக்கப்பட்டு தனியாக எதிர்கொள்பவர்களுக்காக ஒரு பட்டியல் தயார் செய்துள்ளேன்.  இது லேசான மற்றும் மிதமான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கு மட்டும்தான். இந்த டிப்ஸ் அனைத்துமே மருத்துவரால் ‘டிக்’ செய்யப்பட்டது.நான் இதிலிருந்து மீண்டாலும் இந்த நோயால் ஏராளமான இளைஞர்கள் இறப்பதைப் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.அதுதான் வைரஸிடமிருந்து காப்பாற்றுகிறது.வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். பத்திரமாக இருங்கள். மிகமுக்கியமாக கருணையோடு இருங்கள். இந்த போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை இங்கு யாருமே பாதுகாப்பாக இல்லை’ எனப் பதிவிட்டிருக்கிறார்.


 

 


 

  

 


View this post on Instagram


  

 

  

  

 

 
 

 


A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) ஆண்ட்ரியாவின் 10 அட்வைஸ் • கொரோனா பாசிட்டிவ் வந்தால் நெகட்டிவாக யோசிக்காதீர்கள். மனதளவிலும் பாசிட்டிவ்வாக இருங்கள்.பயம் எல்லாவற்றையும் பாழ்படுத்தும்.மீண்டு வருவதைப் பற்றி மட்டும் யோசியுங்கள், வேறு எதைப்பற்றியும் யோசிக்கவேண்டாம்.

 • கொரோனா வைரஸ் மூக்கு, தொண்டை கடைசியாக நுரையீரலை பாதிக்கிறது. உங்கள் மூச்சுக்குழாயை எப்படியெல்லாம் சுத்தமாக வைத்திருக்கலாமோ அத்தனை முயற்சியையும் மேற்கொள்ளுங்கள்.புதினா, யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து நீராவி பிடிப்பது மேஜிக் போல வேலை செய்கிறது. அடிப்படை மூச்சுபயிற்சி செய்யுங்கள்.

 • நாம் என்ன சாப்பிடுகிறோம்/குடிக்கிறோம் என்பது மிகமுக்கியம்.நமது தினசரி உணவுப்பழக்கத்திலேயே நிறைய சூப்பர் உணவுகள் இருக்கின்றன. மிளகு ரசம், இஞ்சி டீ, மஞ்சள் தூள் கலந்த பால், சூப் குடிக்கலாம். நெஞ்சில் சளியை அதிகப்படுத்தும் உணவுகளைத் தவிர்க்கவும்.தண்ணீர், ஜூஸ் நிறையக் குடிக்கவும்.

 • சுத்தமான காற்றை தினமும் சுவாசிக்க முயற்சி செய்யவும். உங்கள் வீட்டு பால்கனிக்கோ மொட்டைமாடிக்கோ செல்லலாம். குறைந்தபட்சம் உங்கள் வீட்டு ஜன்னல் கதவாவது சிறிது நேரம் திறந்திருக்கட்டும்.

 • வைட்டமின் மாத்திரைகள் மட்டுமல்லாமல் துளசி, அஸ்வகந்தா போன்ற எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் இந்திய மூலிகைகளை தினமும் சாப்பிடுங்கள்.

 • நெகடிவ் செய்திகளைத் தவிர்க்கவும். கொரோனா கேஸ் எண்ணிக்கைகளைப் பார்க்கவே வேண்டாம். நெகட்டிவ் செய்திகள் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேளுங்கள்.பிடித்த புத்தகத்தைப் படிக்கலாம், குடும்பம், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடன் அடிக்கடி ஃபோனில் பேசுங்கள்.

 • நீங்கள் தனிமையில் இருக்கும் நாட்களில் உங்களுக்கு மனதளவிலான ஆதரவு தேவைப்படுவது தவறில்லை. இதற்காக நிறைய ஹெல்ப்லைன் வசதிகள் இருக்கின்றன. அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

 • குடும்பம் மட்டுமில்லாமல் உங்களைச்சுற்றியிருக்கும் அனைவரையுமே பாதுகாக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு அருகில் இருந்தவர்களை எல்லாம் கண்டிப்பாக கொரோனா டெஸ்ட் எடுக்கச் செய்யுங்கள்.

 • அறிகுறிகள் தென்படும்போதே உங்களது டாக்டரைத் தொடர்புகொள்ளுங்கள்.உதவி வரும் வரை குப்புறப்படுத்து மூச்சுவிடுவது போன்ற முச்சுப்பயிற்சிகளைச் செய்யலாம்.

 • கொரோனா சர்வதேசத் தொற்று.உங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது உங்கள் பிழையல்ல. இதைக்கொண்டு உங்களையோ கொரோனா பாதித்த மற்றவர்களையோ தாழ்த்தி மதிப்பிட வேண்டாம்.கொரொனா பாதித்தவர்களிடம் கனிவோடு இருங்கள், உங்களிடமும்தான்.


நாம் அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைந்திருக்கிறோம்.

Tags: Corona COVID-19 Instagram Andrea Jeremiah

தொடர்புடைய செய்திகள்

தூத்துக்குடி : இலங்கைக்கு படகில் தப்பமுயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது!

தூத்துக்குடி : இலங்கைக்கு படகில் தப்பமுயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது!

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

டாப் நியூஸ்

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!